பல் குறியீட்டு முறைகள்

பல் குறியீட்டு முறை வாயிலுள்ள ஒவ்வொரு பல்லையும் குறிக்கப் பல் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் முக்கியமான மூன்று முறைகள்:

  1. சிக்மான்டி பாமர் முறை
  2. எப் டி ஐ முறை
  3. பொது முறை

சிக்மான்டி பாமர் முறை தொகு

வாய்ப்பகுதி நான்கு காற்பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு காற்பாகப் பற்களும் முன்னிருந்து பின்னாக 1 முதல் 8 வரைக் குறிக்கப்படுகிறது. எந்த காற்பாகம் எனக் குறிக்க ‘ட’ வடிவக் கோடு கொடுக்கப்படுகிறது. இந்த ‘ட’ வடிவம் எந்தப்புறம் திரும்பி உள்ளதோ, அந்தக் காற்பாகத்தை அந்தக் கோடு குறிக்கும். பின் குறிப்பிட்ட பல்லினைக் குறிக்கும் எண்ணானது அந்தக் கோட்டினுள் எழுதப்படும்.

எப் டி ஐ முறை தொகு

இதில் வாயின் ஒவ்வொரு கால்பாகத்திற்கும் 1 முதல் 4 வரையான எண்கள் தரப்படும். (1 -வலது மேல்; 2 -இடது மேல்; 3 -இடது கீழ்; 4 -வலது கீழ்). பின் ஒவ்வொரு கால்பகுதியிலுள்ள பற்களுக்கும் தனி எண் தரப்படும். இப்போது கால்பகுதி மற்றும் குறிப்பிட்ட பல் எண்ணைச் சேர்த்து எழுதினால் அது சரியாக அந்தப் பல்லினைக் குறிக்கும்.

பொது முறை தொகு

இதில் ஒவ்வொரு பல்லுக்கும் 1 முதல் 32 வரையான எண்கள் குறிக்கப்படும். இதில் வாய் எந்தப் பாகமாகவும் பிரிக்கப்படுவதில்லை. இதில் எண்கள் மேல் வலமிருந்து தொடங்கி, மேல் இடமாக கீழ் இடம் வந்து, கீழ் வலம் வரைக் குறிக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_குறியீட்டு_முறைகள்&oldid=1651478" இலிருந்து மீள்விக்கப்பட்டது