பல் வகைகள்

அடிப்படையில் மனிதப்பற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:

  1. வெட்டுப்பல் (Incisor)
  2. கோரைப்பல் (Canine)
  3. முன்கடைப்பல் (Premolar)
  4. கடைப்பல் (Molar)

எண்ணிக்கை தொகு

மனிதர்களுக்கு 8 வெட்டுப்பற்கள், 4 கோரைப்பற்கள்; 8 முன்கடைப்பற்கள்; 12 கடைப்பற்கள் என மொத்தமாக பற்களின் எண்ணிக்கை 32. ஆனால் சிலருக்கு இதனை விடக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இது போன்ற எண்ணிக்கை மாற்றங்கள் ஏதேனும் கூட்டுக்குறியின் (syndromes) காரணமாக இருக்கலாம். பெரும்பாலானோருக்கு ஞானப்பல் எனப்படும் மூன்றாம் கடைவாய்ப்பல் இருப்பதில்லை.

செயல் தொகு

பற்கள் அவற்றின் பெயரைக் குறிக்கும் வகையிலான செயல்களைப் புரிகின்றன. முன் புறமுள்ள வெட்டுப்பற்கள் உணவினை கத்தி போல் வெட்டப் பயன்படுகிறது. பழங்களை உண்ண முன் வெட்டும் பற்களைக் கொண்டு கடிப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கோரைப்பற்கள் உணவினைக் கிழிக்கப் பயன்படுகிறது. எனவேதான் இந்த பற்கள் மிகக் கூறாக வாயின் பக்கவாட்டில் அமைந்து உள்ளன. மனிதர்கள் நன்கு சமைத்த உணவினை உண்டு பழகியதால், பரிணாம வளர்ச்சியில் அதன் கூர்மை குறைந்து இருக்கிறது. நாய் போன்ற விலங்குகளுக்கு, உணவினைக் கிழிக்க, இந்தக் கோரைப்பற்கள் மிக உதவியாக உள்ளன. முன்கடை மற்றும் கடைவாய்ப்பற்கள் உணவினை மென்று தின்னப் பயன்படுகிறது. கடைசியாக உள்ள ஞானப்பல் எனப்படும் மூன்றாம் கடைவாய்ப்பல் மனிதரில் பெரிதும் செயல் புரிவதில்லை. இது மனிதனின் 18 வயதிற்கு மேல் உலக அறிவு (ஞானம்) சிறிது பெற்ற பின் முளைப்பதால் ஞானப்பல் என அழைக்கப்படுகிறது.

வடிவம் தொகு

பற்களின் வடிவம் அவற்றின் செயல்களை இலகுவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வெட்டும்பற்கள் கூரான உளி போன்ற அமைப்பையும், கோரைப்பற்கள் கூம்பு வடிவ அமைப்பையும், முன்கடை மற்றும் கடைவாய்ப்பற்கள் பல மலைமுகடுகள் போன்ற அமைப்பையும் கொண்டுள்ளன. இந்த பற்களின் வடிவம் வயதாக ஆக ஏற்படும் பல் தேய்மானத்தால் சிறிது மாறுபடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_வகைகள்&oldid=2746398" இலிருந்து மீள்விக்கப்பட்டது