பளிங்கு அரண்மனை (கொல்கத்தா)

பளிங்கு அரண்மனை (Marble Palace) இந்தியாவின் வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த அரண்மனையாகும். 46, முக்தாரம் பாபு தெரு, கொல்கத்தா, 700007 என்பது இந்த அரண்மையின் முகவரியாகும். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அழகியக்கட்டிடம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பளிங்கு சுவர்கள், தரைகள், சிற்பங்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற அரண்மனையாக இருப்பதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.[1]

பளிங்கு அரண்மனை
Marble Palace
Map
22°34′55″N 88°21′34″E / 22.5820°N 88.3595°E / 22.5820; 88.3595
திறக்கப்பட்ட தேதி1854
அமைவிடம்கொல்கத்தா, இந்தியா
உறுப்புத்துவங்கள்மத்திய விலங்குக் காட்சி ஆணையம், இந்தியா

வரலாறு

தொகு
 
பளிங்கு அரண்மனையின் கட்டிடங்கள்
 
பளிங்கு அரண்மனையின் கட்டிடங்கள்

1835 ஆம் ஆண்டில் ராச ராசேந்திர முல்லிக் இந்த அரண்மையைக் கட்டினார். பல அழகிய மேற்கத்திய சிற்பங்கள், விக்டோரியன் மரச்சாமான்களைக் கொண்ட துண்டுகள் மற்றும் ஐரோப்பிய மற்றும் இந்திய கலைஞர்களின் ஓவியங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன பெரிய சரவிளக்குகள், கடிகாரங்கள், அரசர்கள் மற்றும் அரசிகளின் மார்பளவு சிலைகள் அரண்மனையின் நடைக்கூடத்தை அலங்கரிக்கின்றன. பளிங்கு அரண்மனையில் பளிங்கு சுவர்களும் தரையும் சிறப்பு வாய்ந்தவையாகும். தொல் பழம்பொருட்கள், பீட்டர் பவுல் ரூபன்சு வரைந்த ஓவியங்கள், நுண்ணிய பளிங்கு சிலைகள், கூரையிடும் கண்ணாடிகள் மற்றும் அரிய பறவைகளின் சேகரிப்புகள் ஆகியனவற்றால் இந்த அரண்மனை பிரபலமானதாக கருதப்படுகிறது. அழகிய மேற்கத்திய சிற்பங்கள், விக்டோரியன் மரச்சாமான்களைக் கொண்ட துண்டுகள் மற்றும் ஐரோப்பிய மற்றும் இந்திய கலைஞர்களின் ஓவியங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. பெரிய சரவிளக்குகள், கடிகாரங்கள், அரசர்கள் மற்றும் அரசிகளின் மார்பளவு சிலைகள் அரண்மனையின் நடைக்கூடத்தை அலங்கரிக்கின்றன[2].

பளிங்கு அரண்மனையில் பளிங்கு சுவர்களும் தரையும் சிறப்பு வாய்ந்தவையாகும். தொல் பழம்பொருட்கள், பீட்டர் பவுல் ரூபன்சு வரைந்த ஓவியங்கள், நுண்ணிய பளிங்கு சிலைகள், கூரையிடும் கண்ணாடிகள் மற்றும் அரிய பறவைகளின் சேகரிப்புகள் ஆகியனவற்றால் இந்த அரண்மனை பிரபலமானதாக கருதப்படுகிறது.பளிக்கு அரண்மனையில் இன்னும் கூட சிலர் வசிக்கின்றனர். அரண்மனைக்குள் பிரவேசிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க சுற்றுலா அலுவலகத்திலிருந்து அனுமதி பெறப்பட்ட பின்னரே உள்ளே செல்ல முடியும்.

விலங்கியல் பூங்கா

தொகு

அரண்மனைக்கு அருகில் ஒரு விலங்கியல் பூங்கா அமைந்திருக்கிறது. இந்த பளிங்கு அரண்மனை மிருகக்காட்சி சாலையே இந்தியாவில் அமைக்கப்பட்ட முதலாவது விலங்கியல் பூங்காவாகும். இப்பூங்காவும் ராச ராசேந்திர முல்லிக்கினால் அமைக்கப்பட்டதாகும். முக்கியமாக மயில்கள், பழந்திண்ணிப் பறவைகள், நாரைகள் மற்றும் கொக்குகள் முதலான பறவைகள் வாழுமிடமாக இவ்விடம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dasgupta, Prosenjit (2000). 10 Walks in Calcutta. Harper Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7223-383-3.
  2. Sengupta, Somini (May 3, 2009). "A Walk in Calcutta". New York Times. பார்க்கப்பட்ட நாள் May 25, 2010.