பளிச்சியம்மன்

பளிச்சியம்மன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். [1] இவர் குறித்து இரு வேறு கதைகள் உள்ளன. இரண்டு பளிங்கர் பெண்ணிற்கு நடைபெற்றவை அவையாக இருக்கலாம். இருவருமே பளிங்கர் இனத்தவர் என்பதால் பளிச்சியம்மன் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.

தொன்மக் கதை

தொகு

மேல் மலையடிவாரத்தில் சிவசைலம் எனும் கிராமத்தில் சேதுராயர் சாதி இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கும் மலையில் மலைப்பளிங்கர் சாதி பெண்ணுக்கும் காதல் உண்டானது. இரு சாதி மக்களும் பிற சாதியிலிருந்து வரன்களை பெறுவதில்லை. எனவே இவர்களின் காதலுக்கு பலமான எதிப்பு நிலவியது. இருவரும் தங்கள் காதலை எண்ணிபடியே இளமையை கழித்தார்கள். பொறுமை இழந்த பளிச்சி அவனை காண அவனூருக்கு செல்ல முனைந்தாள். வழியில் கருணையாறு எதிர்பட அதன் கரையிலேயே தங்கினாள். அவன் இறுதி வரை வராமல்போக அங்கேயே மடிந்தாள்.[1]

மற்றொரு கதை

தொகு

பளியர் இனப் பெண்ணான இவர் பளிச்சியம்மன் என அழைக்கப்படுகிறார். இவருடைய தொன்மக் கதை கண்ணகியுடன் தொடர்புடையதாக உள்ளது. தவறான தீர்ப்புக்காக மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து நடைபயணமாக கூடலூர் பளியங்குடியை அடைகிறார். மாலை நேரத்தில் அங்குள்ள மலையில் ஏறுகையில் எதிர்வரும் பளிங்கர் இனப்பெண் தன் சேலையை கிழித்து தீப்பந்தமாக்கி தந்தார். மிருகங்கள் உலாவும் மலையில் தன்னை காக்க நினைத்த பெண்ணை பளிச்சியம்மன் தெய்வமாகி, மக்களை காக்குமாறு கண்ணகியம்மன் வரம் தந்தார்.

வழிபாடு

தொகு

கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் பளிச்சியம்மனை வழிபடுகின்றனர். [2]


கோவில்கள்

தொகு
  • கொடைக்கானல் பளிச்சியம்மன் கோவில்.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=236&pno=27
  2. http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/01/17/ஆதிவாசிகள்-கொண்டாடிய-பொங்க/article2622153.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பளிச்சியம்மன்&oldid=2082834" இலிருந்து மீள்விக்கப்பட்டது