பள்ளிப் பாதுகாப்பு
பள்ளிப் பாதுகாப்பு (School security) என்பது கல்விச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்து எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.[1] இது வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதலில் இருந்து மாணவர்களின் தங்குமிடம் ஆகியவற்றைப் பாதுகாப்பது மற்றும் போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் கும்பல் செயல்பாடு போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளிப்படுத்துவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது என வரையறுக்கப்படுகிறது.[2] மற்ற பொது இடங்களுடன், பள்ளிகளை ஒப்பிடும்போது வெளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
தொகுதுப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகள்
தொகுஅமெரிக்காவில், 1990 முதல் சனவரி 2018 வரை குறைந்தது 240 பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 450% அதிகரித்துள்ளது [3] பள்ளிக் குண்டுவெடிப்புகள் 2016 இல் 22 முறை நடந்துள்ளது. ஆனால் அமெரிக்க வெடிகுண்டு தரவு மையத்தின் படி, மற்ற கட்டிடங்களை விட கல்வி தொடர்பான கட்டிடங்கள் இரண்டு மடங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.[4] 74% கல்வி தொடர்பான அச்சுறுத்தல்கள் நடுநிலைப் பள்ளிகள், இளையோர் உயர்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படுகின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 2013-2014 கல்வியாண்டில், 93% பொதுப் பள்ளிகள், பள்ளிக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் வகையில் கதவுகள் மற்றும் வாயில்களை பூட்டுதல் அல்லது கண்காணித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.[5] அரசுப் பள்ளிகளின் நுழைவாயில்களில் மாணவர்கள் ஆயுதங்களை பள்ளிகளுக்குள் கொண்டு வருவதைத் தடுக்க மெட்டல் உலோக உணர்வி நிறுவப்பட்டுள்ளன.[6]
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொகுபள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு பள்ளி மாவட்டத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்று தேசியப் பள்ளி வாரிய சங்கம் கூறுகிறது.[7]
பள்ளி வள அலுவலர்கள்
தொகுஅமெரிக்கப் பள்ளிகளில் மற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கிடையே கும்பல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பள்ளி வளாகங்களில் காவலர்களின் ஆய்வு அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் , தேசிய கல்விப் புள்ளியியல் மையம், அமெரிக்காவில் உள்ள 43% பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறை முதல் முழு நேர வேலை நேரம் வரை பள்ளி வள அலுவலர்களை தங்கள் வளாகங்களில் வைத்திருப்பதாக அறிவித்தது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ . 2016-11-11.
- ↑ "Safety | Safe Supportive Learning". safesupportivelearning.ed.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ Duplechain, Rosalind; Morris, Robert (Winter 2014). "School Violence: Reported School Shootings and Making Schools Safer". Education 135 (2): 145–150. https://www.ingentaconnect.com/content/prin/ed/2014/00000135/00000002/art00001.
- ↑ "United States Bomb Data Center Explosive Incident Report". ATF.gov. 2016. https://www.atf.gov/explosives/docs/report/2016-explosives-incident-report/download.
- ↑ "The NCES Fast Facts Tool provides quick answers to many education questions (National Center for Education Statistics)". nces.ed.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ "Government Gives Go-Ahead to Metal Detectors in Schools". Education. No. 243. 20 October 2006. pp. 3–5.
- ↑ "School Safety, Security, and Emergency Preparedness | National School Boards Association". www.nsba.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ Gray, Lucinda; Lewis, Laurie (May 2015). "Public School Safety and Discipline 2013-14" (PDF).