பள்ளியறை

இந்து கோயில் கட்டிடக்கூறு

பள்ளியறை என்பது இந்து கோவில்களில், இரவு நேரத்தில் உற்சவரை வைக்கும் இடத்தைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இது பொதுவாக தெய்வங்களின் ஓய்வுக்கான இடமாகவும், இந்துக்களால் மிகவும் புனித இடமாக கருதப்படுகிறது. பல பாரம்பரிய இந்து கோயில்களில், இறுதி பூஜை (அர்த்தசாம பூசை) நாளில், தெய்வம் தனது தெய்வீக கணவரின் வசிப்பிடத்திற்கு வழக்கமாக அழைத்துச் செல்லப்படுகிறது. இது பொதுவாக பல கோயில்களில் இரவு ஒன்பது மணிக்குள் நடக்கிறது. எடுத்துக்காட்டாக, மதுரை மீனாட்சி கோவிலில் நடைபெறுகிறது. [1]

இந்த நிகழ்வு காண தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனா். மேலும் கோவில் உள் கோபுரங்களைச் சுற்றி தெய்வங்களைக் கொண்டு ஆடம்பரத்துடன் கூடிய ஒரு ஊர்வலமும் அடங்கும். நாளின் முதல் வழிபாட்டுக்கு, கடவுளின் வாசல்கள் திறக்கப்படும் போது, பொதுவாக திருபள்ளியெழுச்சி (அதாவது, தெய்வீக ஓய்வுக்கு  பிறகு எழுந்திருப்பது) என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதி போன்ற விஷ்ணு கோயில்களில் பரவலாக கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில், முதன்மைத் தெய்வத்தின் பின்னணியில் ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Worship in Chidambaram".
  2. "Type of Alankarams at Palani". Archived from the original on 2007-01-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளியறை&oldid=3562290" இலிருந்து மீள்விக்கப்பட்டது