பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்
பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டமாகும். இத்திட்டம் இந்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசு, 01 ஏப்ரல் 2015 முதல் செயல்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.[1][2]
புதிய மருத்துவத் திட்டத்திற்காக தமிழ்நாடு மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 மருத்துவக் குழுக்கள் வீதம் மொத்தம் 770 மருத்துவக் குழுக்கள் செயல்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-05-03.