பழங்கால அளவைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பழைய காலத்தின் பொருட்களின் எடை பார்க்கவும் அவற்றை அளக்கவும், பல அளவைகள் பயன்படுத்தப்பட்டன.
‘விடேல் விடுகு’ எனும் ஓர் எடை - தங்கத்தின் நிறைகாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆதித்தியன் 1 காலத்திய காலக்குறிப்பின் மூலம் அறியலாம். இது திருச்சி மாவட்டம் கருமாவயலூர்என்ற இடத்தில் காணப்பட்டது. தஞ்சாவூரில் காணப்படும் ராஜராஜசோழன் காலத்திய குறிப்புகளின் மூலம் ‘ஆடவல்லான்’ என்னும் நிறையளவு பொன்னை அளவிடுவதற்கும் ‘தட்சிண மேருவிடன்கள்’ என்னம் ஓர் எடையளவு ஆபரணங்களை எடையிடவும் பயன்படுத்தப்பட்டது.
ஒரு மாஞ்சாடி (1-மாஞ்சாடி என்பது 2 குன்றின் மணிகளக்குச் சமமானது)
சோழர் காலத்தில் நில அளவு
தொகுமுதலாம் இராஜராஜ சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் முறையே 1001, 1086, 1236ம் ஆண்டுகளாக சோழ நாடு அளக்கப்பட்டது. இங்கு அளப்பதற்கு நீட்டளவை பயன்படுத்தப்பட்டது.
16 சாண் நீளமுள்ள ‘உலக வளத்தைகோல்’ என்பதாகும்.
நீட்டலளவைப் பகுப்புகள்
தொகுதோரை, விரல், சான், முழம், குழி, மா, வேலி, நிலம் போன்ற நீட்டலளவைகள் வழக்கத்தில் இருந்தது.
வேலி, நிலம்-சமஸ்கிரு மொழியில் வாதிகா என்று அழைக்கப்படுகிறது. வாதகி என்ற அளவே அடிப்படை அளவாக கொள்ளப்பட்டது.
1/2, 1/4, 1/8, 1/30, 1/320 என்ற பல அளவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
கடிகைக் களத்துக்கோல், ஸ்ரீ பாத கோல், மாளிகைக்கோல் போன்ற நீட்டளவைகள் வழக்கில் இருந்தன.
வேலி, குழி, பாடகம், கோல் போன்ற அளவுகள் பல்லவர் ஆட்சியிலும் இருந்தன.
பாண்டிய நாட்டில், சுந்தர பாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் (16 அடி நீளம்) ஆகிய கோல் ஏற் அளவு நில அளவைக்க பயன்படுத்தப்பட்டது.
சோழ நாட்டிற்கு வெளியே மாளிகைக்கோல் வேலி என்ற அளவுகளும் 100 குழிகள் கொண்டது 1 மா என்ற வழக்கத்திலும் இருந்தது.
குறிப்புகள்
தொகு- எண்களின் கதை - சித்ரா