பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள் (நூல்)

பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள்[1] என்பது மஞ்சை வசந்தன் எழுதிய நூல் ஆகும்.

நூலாசிரியர்

தொகு

மஞ்சை வசந்தன், சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் பகுத்தறிவு, தமிழ்ப் பண்பாடு, தன் மதிப்பு, நாட்டர் வழக்காற்றியல் குறித்து எழுதி வருகின்றார். இவர் அர்த்தமற்ற இந்து மதம், சம்பிரதாயங்கள் சரியா? உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பதிப்பு விவரங்கள்

தொகு

விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் இந்நூலினை வெளியிட்டுள்ளனர். இந்நூலின் முதற் பதிப்பு சூன் 2010 இல் வந்தது.

நூலின் முகவுரைச் செய்திகள்

தொகு

பாமரர் குரல் என்றும் தலைப்பில் இந்நூலுக்கு நூலாசிரியர் மஞ்சை வசந்தன் நூல் முகவுயை எழுதியுள்ளார். திருக்குறளைப் போன்று பழமொழிகளும் மக்களுக்குப் பயனுடையது என்று கூறியுள்ளார்.

உள்ளடக்கம்

தொகு

இத்தொகுப்பில் பழமொழிகளைத் தொகுத்து 21 தலைப்பின் கீழ் விளக்கம் அளித்துள்ளார் நூலாசிரியர். இத்தொகுப்பிலுள்ள பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினையும் நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் உள்ளவை பனுவல் பழமொழிகள் ஆகும். பனுவல் பழமொழிகள் என்பன யார் கூறினார், அவை எந்தப் பொருண்மையில் பயன்படுத்தப் பெறுகின்றன என்னும் குறிப்புகளைக் கொண்டிராதப் பழமொழிகள் ஆகும்.

இந்நூலில் குடும்ப இயல், பாலியல், உறவு இயல், நட்பு இயல், உளவியல், கல்வி இயல், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல், உழவியல், ஆட்சி இயல், பொருளியல், போரியல், சட்டவியல், தடயவியல், ஊடகவியல், நிருவாக இயல், மருந்தியல், கலை இயல், இலக்கியம், தத்துவ இயல் ஆகிய குறுந்தலைப்புகளின் அடிப்படையில் பழமொழிகளை விவரிப்பியல் ஆய்விற்கு நூலாசிரியர் உட்படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள், 2010, மஞ்சை வசந்தன், கோயம்புத்தூர்: விஜயா பதிப்பகம்

வெளி இணைப்புகள்

தொகு
  1. நூலகம் இணைப்பில் நூல் அறிமுகம்