பழையன் மாறன்
பழையன் மாறன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவன் கூடல் எனப்பட்ட மதுரையில் இருந்துகொண்டு பாண்டிய நாட்டை ஆண்டவன். இவன் காலத்தில் சோழ மன்னன் கிள்ளிவளவன் இந்த மாறனின் தலைநகர் கூடலை தாக்கினான். கூடல் கிள்ளிவளவனுக்கு வேற்றுப்புலம். ஏதில் மன்னரின் பகைமன்னரின் ஊர். என்றாலும் சோழன் வென்றான். மாறனின் குதிரைகளையும், யானைகளையும் கைப்பற்றிக்கொண்டான். இதனை அறிந்த சேர மன்னன் கோதை மார்பன் மகிழ்ந்தான்.[1]
அடிக்குறிப்பு
தொகு- ↑
நெடுந் தேர்,
இழை அணி யானைப் பழையன் மாறன்,
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே. (அகநானூறு 345)