பழைய காஞ்சிப் புராணம்

காஞ்சிபுரம் நகரின் பெருமைக் கூறும் இலக்கியங்கள், புராணங்கள், தலபுராணங்கள் பல உள்ளன. சிவஞான சுவாமிகள் காஞ்சிப் புராணம் நூலை தலபுராண நூலை அருளியுள்ளார். அவரின் மாணவரான கச்சியப்பரும் காஞ்சிப்புராணம் இராண்டாம் காண்டம் என்னும் நூலை எழுதியுள்ளார். க[1]ச்சாலையார் என்பவரும் காஞ்சிப்புராணம் என்னும் பெயரில் தலபுராணம் எழுதியுள்ளார். இதுவே மேற்கூறப்பட்ட மூன்று காஞ்சிப்புராணங்களில் காலத்தால் முற்பட்டது என்று கருதப்படுகிறது. அதனால், இந்நூல் பழைய காஞ்சிப் புராணம் எனப்படுகிறது. பழையது என்று கூறுவதற்கான அகச்சான்றுகள் ஏதும் நூலில் இல்லை.

நூல் வரலாறு

தொகு

இந்நூல் பன்னிரண்டு சருக்கங்களையும், ஆயிரத்து இருநூற்று எழுபத்திரண்டு விருத்தங்களையும் கொண்டுள்ளது. காஞ்சியம் புராணம் எனக் கணபதி காப்பில் காணப்படுவதுடன் காமாட்சி ஏகம்பவாணர் புராணம் என்றும் ஏகம்பர் புராணம் என்றும், கம்பர் புராணம் என்றும் இந்நூல் வழங்கப்படுகிறது. பன்னிரண்டு சருக்கங்கள்: 1. பாயிரச் சருக்கம், 2. சிவாலயச் சருக்கம், 3. அரிதிருமுற்றச் சருக்கம், 4. தீர்த்தச் சருக்கம், 5. அபிதானச் சருக்கம், 6. கயிலாயச் சருக்கம், 7. உமைவரு சருக்கம், 8. நகரச் சருக்கம், 9. நகர்காண் சருக்கம், 10. பூசைச் சருக்கம், 12. திருவிழாச் சருக்கம்.

நூலாசிரியர்

தொகு

இந்நூலை இயற்றியவர் கச்சாலையார் என்பவர். 18 - ஆம் நூற்றாண்டினராக இருக்கலாம். இவர் பற்றிய வாலாறு கிடைக்கவில்லை. இவர் கச்சாலை அகளங்கர் என்றும் பூரண லட்சண கச்சாலை போதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். கச்சாலை என்பது காஞ்சிபுரத்திலுள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தின் இறைவன் பெயர் ஆகும். கச்சாலை இறைவன் பெயரால் இவர் கச்சாலையார் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் காழி வள்ளல் சந்தானத்துச் சோமானன் என்பவரின் சீடராவார். இவர் கச்சிக்கோவை, பாரதம் போன்ற வேறு நூல்களையும் எழுதியுள்ளார். இவை இன்று கிடைக்கவில்லை.

பதிப்புகள்

தொகு

காஞ்சிப் புராணம் (கம்பர் புராணம்) எனும் இந்நூலை 1983 இல் முதன் முதலாக எஸ்.கே.இராமராஜன் (கம்பராமன்) பதிப்பித்தார். உ.வே.சா. நூல்நிலையம் வெளியிட்டுள்ளது. இது பிரெஞ்சு நாட்டு வின்ஸோன் துறையின் மாணாக்கர் பொண்டெனூ என்பார் ஆர்வமுடன் உ.வே.சா. விடம் இருந்து கேட்டுப் பெற்றுப் படித்துத் தந்த ஒரு ஓலைச் சுவடியாகையால் இதைக் கடல் கடந்த தமிழ் என்று தமது நல்லுரைக்கோவை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் உ.வே.சா.[2] ஆளவந்தார் ஆதீனக் கச்சாலையார் இயற்றிய காஞ்சிப் புராணம் (கம்பர் புராணம்) எனும் தலைப்பில் இந்நூல் சுவடிப் பதிப்பாக வெளிவந்துள்ளது. நூல் தொடக்கத்தில் சுமார் 81 பக்கங்களில், காஞ்சித் திருத்தலங்களைப்பற்றிய குறிப்புகள் எனும் தலைப்பில் சுமார் 84 தலங்கள் அகர வரிசையில் விளக்கப்பெற்றுள்ளன.

உசாத்துணை

தொகு

எஸ்.கே.இராமராஜன் (பதிப்பாசிரியர்). 1983.ஆளவந்தார் ஆதீனக் கச்சாலையார் இயற்றிய காஞ்சிப்புராணம் (கம்பர் புராணம்). சென்னை: உ.வே.சா நூல் நிலையம்.

  1. "kanjcip purANam, canto 2, patalam 1 of kacciyappa munivar (in tamil script, unicode format)". www.projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
  2. அன்னி தாமசு (1995). எண்பத்து மூன்றில் தமிழ் பகுதி 2. சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம், நாட்டை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_காஞ்சிப்_புராணம்&oldid=4146315" இலிருந்து மீள்விக்கப்பட்டது