பழைய பூங்கா, யாழ்ப்பாணம்

பழைய பூங்கா, இலங்கையின் வடமாகாணத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பூங்கா ஆகும். 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்கா முதலில், வட மாகாணத்தின் பிரித்தானிய அரசாங்க அதிபரின் வாழிடமாக 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

பழைய பூங்கா
Old Park
பழைய பூங்காவில் எஞ்சிய பழைய கச்சேரிக் கட்டடம் அல்லது ஆளுனர் வளமனை
வகைநகர்ப்புறப் பூங்கா
அமைவிடம்யாழ்ப்பாணம், இலங்கை
ஆள்கூறு9°39′31.40″N 80°01′46.10″E / 9.6587222°N 80.0294722°E / 9.6587222; 80.0294722
பரப்பு27 ஏக்கர்கள் (11 ha; 0.042 sq mi)
உருவாக்கப்பட்டது19ம் நூற்றாண்டு

வரலாறு தொகு

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பிரித்தானிய அரசாங்கத்தின் அரசாங்க அதிபராகப் பதவி வகித்த பேர்சிவல் அக்லன்ட் டைக் இந்தப் பூங்கா அமைந்திருக்கும் 27 ஏக்கர் நிலத்தை அரசாங்க அதிபரின் இருப்பிடமாகப் பயன்படுத்தும் எண்ணத்தில் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வாங்கினார்.[1] டைக் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் "கலெக்டராக" நான்கு ஆண்டுகளும் (1829-33), பின்னர் அரசாங்க அதிபராக 32 ஆண்டுகளும் (1833-43; 1843-60; 1861-67) பணியாற்றியவர்.).[2][3][4][5] வடக்கு மக்கள் இவரை "வடக்கின் ராஜா" என்றே அழைத்தனர்.[3][6] இந்த நிலத்தை வாங்கிய அவர் அதன் ஒரு பகுதியில் தனக்கான ஒரு மாளிகையையும், மிகுதிப் பகுதியில் ஒரு பெரிய பூங்காவையும் உருவாக்கினார். இதுவே இன்று பழைய பூங்கா என அழைக்கப்படுகிறது. 1867ல் இறக்கும் வரை அரசாங்க அதிபராக யாழ்ப்பாணத்திலேயே இருந்த டைக் இறக்குமுன்னர், இந்த மாளிகையையும் பூங்காவையும் தனக்குப் பின் வருபவர்கள் வாடகை இல்லாமல் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக விக்டோரியா அரசியூடாக அன்பளிப்பாக வழங்கினார்.[1][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Amarasekera, Ranji (16 November 2008). "Being one with Jaffna". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/081116/Plus/sundaytimesplus_16.html. 
  2. Martyn 1923, ப. 15.
  3. 3.0 3.1 Martyn 1923, ப. 16.
  4. Bastiampillai 1987, ப. 175.
  5. Martyn 1923, ப. 32.
  6. Bastiampillai 1987, ப. 176.
  7. Bastiampillai 1987, ப. 179.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_பூங்கா,_யாழ்ப்பாணம்&oldid=3220106" இலிருந்து மீள்விக்கப்பட்டது