பழ ஈ

தொகு

புளிப்புக்காடி ஈ , பழப்பிழிவெச்ச ஈ ஏனவும் கூறலாம். சேதமற்ற, அழுகி பழங்களில் அதிகம் காணப்படும் . நொதித்துக்கொண்டிருக்கும் தாவர சாறுகளில் இருக்கும் . சதைப்பற்றுள்ள பூக்கும் தாவரங்களில் வளர்க்கிறது . பழ ஈ சிற்றினங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும்.

 
பழஈ

மரபியல் ஆய்வுகளில் பழ ஈ

தொகு

அளவில் சிறியதாக இருப்பதால் சிறிய சுண்ணாம்பு குப்பிக்குள் வளர்க்க முடியும் . வாழ்க்கை சுழற்சி சிறியதாக இருப்பதால் ஆய்வுக்கு தேவையான பல தலைமுறை ஈக்கள் மிகக்குறுகிய காலத்தில் பெறமுடியும் . இவை அறை வெட்பநிலையில் இனப்பெருக்கம் செய்வதால் எளிதில் பெருக்கம் அடையும் . வளர்ப்பதற்கும் , பாதுகாப்பதற்கும் குறைத்த செலவே ஆகும் . நான்கு குரோமோசோம்கள் இருப்பதால் ஆய்வு மிக எளிதாகும் . உமிழ்நீர் சுரப்பில் உள்ள கூட்டுக் குரோமோசோம்கள் மரபியல் ஆய்வுக்கு பயன்படும்.

ஆண் ஈ

தொகு

உருண்டையான வயிறு. வயிற்றின் நுனி பகுதியில் உள்ள காப்பு பட்டை மிக நெருக்ககமாக உள்ளதால் அவை கருமையான பட்டை போன்று தோன்றுகிறது . வயிறுப்பகுதியில் கைட்டினால் ஆன இரண்டு கிடுக்கிகள் காணப்படும் . முன்கால்களில் முதல் டார்சஸ் கணுவில் வரிசையாக இழைகள் உள்ளன.

பெண் ஈ

தொகு

கூர்மையான வயிற்றுப்பகுதி காணப்படும் . வயிற்றின் இறுதிப்பகுதில் காப்பு பட்டைகள் குறுகி உள்ளதால் அவை தனித்தனியாகத் தெரியும் . கிடுக்கிகள் இல்லை.

வாழ்க்கை சுழற்சி

தொகு

கருவுற்றபின் கருவளர்ச்சி நடைபெற ஒரு நாள் ஆகிறது . இதன் பின்னர் 2 முறை தோலுரித்த பின் 4 நாள் கழித்து கூ ட்டுப்புழுவாக மாறும். மேலும் 4 நாள் கழித்து முதிர் உயிரியாக வெளிவரும் .வாழ்க்கை சுழற்சி நடைபெற 10 நாள் ஆகும் . முதிர் உயிரி ஏறக்குறைய 10 வாரம் வரை உயிரி வாழும் .

பழ ஈ பல் கூட்டு பண்பு

தொகு

மெண்டலின் பாரம்பரிய கொள்கைப்படி ஓங்கு பண்பு, ஒடுக்கு பண்பு ஆகியவற்றிக்கான காரணி சந்ததிகளிடமிருந்து எவ்வித கலப்புத்தன்மையும் இல்லாமல் பிரிந்து கூடுகிறது என்று மெய்பிக்கப்பட்டது .கண்களின் நிறம் பல் கூட்டு பண்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு .

குரோமோசம் கொள்கை

தொகு

சட்டன், போவரி இருவரும் பாரம்பரிய பண்புகளுக்கு காரணமான மரபணுக்கள் குரோமோசோம்களில் அமைந்திருக்க வேண்டும் என்று கூறினர். 1910ல் மார்கன் இக்கொள்கை அடிப்படையை பழஈயில் கண்டறிந்தார். பின்னர் பிரிட்ஜிஸ் இக்கொள்கையை குரோமோசோம் கொள்கையாக நிலைநாட்டினார். கண்களின் நிறம் பால்வழிப் பாரம்பரியதால் பெறப்படுகிறது என்பதை நிரூபித்தனர்.[1] [2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி பதினான்கு
  2. Bakker K (1961). "An analysis of factors which determine success in competition for food among larvae of Drosophila melanogaster". Archives Neerlandaises de Zoologie. 14 (2): 200–281. doi:10.1163/036551661X00061.
  3. Sturtevant, A.H. (1929). "The claret mutant type of Drosophila simulans: a study of chromosome elimination and cell-lineage". Zeitschrift für wissenschaftliche Zoologie. 135: 323–356.
  4. Drosophila suzukii (Diptera: Drosophilidae): Spotted wing drosophila. European and Mediterranean Plant Protection Organization. January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழ_ஈ&oldid=4100600" இலிருந்து மீள்விக்கப்பட்டது