பவளத்தாலி

பெண்கள் அணியும் அணிகலன்

பவளத்தாலி என்பது தமிழர்களில் சில குறிப்பிட்ட சமூகத்து பெண்கள் அணியும் அணிகலன் ஆகும். விளக்கீடு கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் இது அணியப்படுகிறது. பெண்னிற்கு 5, 7 அல்லது 9ஆவது வயதில் இதை அணிகின்றனர். திருமணமான பின்பு இதை அணிவதில்லை.

அணிவதன் காரணம்

தொகு

இதை இளம் வயதிலேயே அணிவதால் அந்த பெண்ணைப் பார்க்கும் ஆண்கள் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென எண்ணி தவறான நோக்கத்துடன் நெருங்கமாட்டார்கள் என்பதால் இதை அணிவதாக அச்சமூகத்தினர் கூறுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளத்தாலி&oldid=1998092" இலிருந்து மீள்விக்கப்பட்டது