பாகல்புரி பட்டு

இந்தியவின் பீகார் மாநிலம் பாகல்பூரில் நெய்யப்படும் பட்டுப்புடவை பாணி

பாகல்புரி பட்டு (Bhagalpuri silk) என்பது பட்டுப் புடவைகளின் பாரம்பரிய பாணியாகும். இதை துசார் பட்டு என்ற பெயராலும் அழைப்பர். [1] இந்த பாணி பாகல்புரி புடவை என்று பெயரிடப்பட்ட புடவைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பாகல்பூர் இந்தியாவின் "பட்டு நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. பாகல்புரி பட்டு அந்தெரியா பாபியா பட்டுப்புழுக்களின் கூடுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வான்யா பட்டுப்புழு என்றும் அழைக்கப்படும் இந்த இனம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும். இந்த பட்டுப்புழுக்கள் காடுகளில் டெர்மினாலியா இனத்தைச் சேர்ந்த மரங்களில் வாழ்கின்றன. நாத்நகர் என்ற நகரம் பாகல்புரி பட்டு பதப்படுத்தப்படும் முக்கியமான இடமாகும். புடவையைத் தவிர, சால்வைகள், குர்திகள் மற்றும் பிற ஆடைகளும் பாகல்புரி பட்டில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Dutta, Sudev; Bansal, Payal (2022), Yan, Xinfeng; Chen, Lihong; Memon, Hafeezullah (eds.), "Textile Academics in India—An Overview", Textile and Fashion Education Internationalization : A Promising Discipline from South Asia (in ஆங்கிலம்), Singapore: Springer Nature, pp. 13–34, doi:10.1007/978-981-16-8854-6_2, ISBN 978-981-16-8854-6, பார்க்கப்பட்ட நாள் 2022-12-30
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்புரி_பட்டு&oldid=3856581" இலிருந்து மீள்விக்கப்பட்டது