பாகா கலிபோர்னியா மூவலந்தீவு

பாஹா கலிபோர்னியா தீபகற்பம் (Baja California peninsula) என்பது மெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது பசுபிக் பெருங்கடலையும் கலிபோர்னிய வளைகுடாவையும் பிரிக்கும் முக்கிய தீபகற்ப நிலப்பகுதி. இந்த தீபகற்ப பகுதியில் மெக்சிகோ நாட்டின் மாநிலங்களான பாஹா கலிபோர்னியா மற்றும் பாஹா கலிபோர்னியா சூர் ஆகியவை அமைந்துள்ளன.

வட அமெரிக்கக் கண்டத்தின் தென்மேற்கு கோடியில் அமைந்துள்ள பாஹா கலிபோர்னியா (கீழ் கலிபோர்னிய) தீபகற்பம்.