பாக்கித்தான் விலங்கியல் சங்கம்

பாக்கித்தானிய அமைப்பு நிறுவனம்

பாக்கித்தான் விலங்கியல் சங்கம் (Zoological Society of Pakistan) விலங்கியல் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து பாக்கித்தான் நிபுணர்களின் நலன்களையும் ஒன்றிணைத்து சேவை செய்ய முயல்கிறது. இச்சங்கம் 1968 ஆம் ஆண்டு பாக்கித்தான் அறிவியல் முன்னேற்ற சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாட்டின் போது நிறுவப்பட்டது. [1]

பாக்கித்தான் விலங்கியல் சங்கம்
Zoological Society of Pakistan
உருவாக்கம்3 March 1968; 52 ஆண்டுகள் முன்னர் (3 March 1968), டாக்கா, கிழக்கு பாக்கித்தான் தற்போது வங்காள தேசம்
நிறுவனர்பாக்கித்தான் அறிவியல் முன்னேற்ற சங்கம்
வகைஇலாப நோக்கமற்ற நிறுவனம்
தலைமையகம்லாகூர்
செயல்நோக்கம்விலங்குகளீன் நடத்தைகள் பற்றிய அறிவியலை உலகம் முழுவதும் பரப்புவது
வலைத்தளம்www.zsp.com.pk

இச்சங்கம் விலங்கியல் விஞ்ஞான அறிவின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் முயல்கிறது. விவாதங்கள், அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் மூலம் விலங்குகளின் அறிவியல் பற்றிய அறிவை மக்களிடம் வளர்க்க முயல்கிறது.[2] பேராசிரியர் முனைவர் அப்சல் கசுமி இச்சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார். [3]

தற்போது சங்கத்தில் 10 கெளரவ உறுப்பினர்களும் 327 உறுப்பினர்களும் 115 வாழ்நாள் உறுப்பினர்களும் உள்ளனர். ஆண்டுதோறும் பாக்கித்தான் விலங்கியல் கூட்டத்தை இச்சங்கம் ஏற்பாடு செய்கிறது, மேலும் பாகித்தான் விலங்கியல் செய்தி இதழையும் வெளியிடுகிறது. [1]

மேற்கோள்கள்தொகு