பாக்குவெட்டியைக் காணோமே

சிறுவர் விளையாட்டு

பாக்குவெட்டியைக் காணோமே என்னும் பாடலோடு விளையாடப்படுவதால் இந்த விளையாட்டு இப்பெயர் பெற்றது. பாக்குமரத்தில் ஏறிப் பாக்குக் குலைகளை வெட்டித் தருபவன் பாக்குவெட்டி.

ஆடும் முறை

தொகு

விளையாடுவோரில் ஒருவர் பட்டவர். ஏனையோர் ஒருவர் இடுப்பில் மற்றொருவர் எனப் பின்புறம் பிடித்துக்கொண்டு நிற்பர். அவர்களில் ஒருவர் பாக்குவெட்டி என அவர் கையில் ஓர் அடையாளம் கொடுத்து வைக்கப்படுவார்.

பாட்டு
பட்டவர்
பாக்குவெட்டியைக் காணோமே
மற்றவர்
தேடிப் பிடித்துக்கொள்.

பட்டவர் அவரைக் கண்டுபிடித்து வெளியே இழுத்துவர வேண்டும். மூன்று தடவைக்குள் கண்டுபிடித்து இழுத்துவராவிட்டால் பட்டவர் தலையில் விளையாடிய எல்லாரும் ஆளுக்கொரு குட்டு வைப்பர். அடையாளம் வைத்திருந்த பாக்குவெட்டி பட்டவராகி மறுஆட்டம் நடைபெறும். கண்டுபிடித்துவிட்டால் குட்டு இல்லை. பாக்குவெட்டி பட்டவராக மாறி ஆட்டம் தொடரும். பட்டவர் பாக்குவெட்டியைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவரை மற்றவர் இடுப்புப் பிடியிலிருந்து விடுவிப்பது கடினம்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954