பாங்னோன் கொன்யாக்
இந்திய அரசியல்வாதி
பாங்னோன் கொன்யாக் (Phangnon Konyak) நாகலாந்து மாநிலத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாகாலாந்தின் பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவர் ஆவார். இவர் மார்ச் 2022-ல், நாகாலாந்திலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார்.[1][2][3]
பாங்னோன் கொன்யாக் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | கே. ஜி. கென்யே |
தொகுதி | நாகலாந்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாங்னோன் வாங்சா கொன்யாக் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | தில்லிப் பல்கலைக்கழகம் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகொன்யாக் திமாபூர் திருச்சிலுவை மேனிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.[1] தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தினை 2002ஆம் ஆண்டு பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் செயல்பாடு மற்றும் சமூக அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meet Phangnon Konyak, Nagaland's First Woman Rajya Sabha MP In 45 Years". Kayalvizhi Arivalan. Femina. 23 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ "BJP's S Phangnon Konyak to become Nagaland's first woman Rajya Sabha MP". Times Now. 21 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ "Nagaland set to get first woman Rajya Sabha MP". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.