பாசறை
பாசறை அல்லது கன்டோன்மெண்ட் (cantonment) என்பது பொதுவாக இராணுவத்தினர் தங்குமிடத்தைக் குறிக்கிறது.[1] பிரித்தானிய இந்தியா ஆட்சியில், பாசறை என்பது இராணுவத்தினர் நிரந்தரமாக தங்குமிடத்தைக் குறிக்கிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவத்தில் பாசறை என்பது இராணுவத்தினரின் குடியிருப்புப் பகுதி ஆகும்.
பிரான்சிய மொழியில் கன்டோன்மெண்ட் என்ற சொல்லுக்கு கன்டோன், மூலை அல்லது மாவட்டம் என்று பொருள்.[2]மேலும் இராணுவத்தினர் தற்காலிக தங்குமிடம் அல்லது குளிர்காலத்தில் இராணுவத்தினர் தற்காலிக கூடாரம் அடித்து தங்குமிடம் ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "cantonment". Dictionary.com Unabridged. Random House.
- ↑ "canton". Dictionary.com Unabridged. Random House.
- ↑ Encyclopædia Britannica Eleventh Edition Waterloo Campaign