தமிழ் இலக்கணத்தில் பாசறை நிலை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். தொல்காப்பியத்தில், வஞ்சித்திணையின் ஒரு துறையாகக் கூறப்படாத இது, பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள் வெண்பாமாலையில் சேர்க்கப்பட்டு உள்ளது. பகை மன்னர்கள் பணிந்து விட்ட போதும், பாசறையிலேயே தங்கியிருக்கும் மன்னனது நிலையைக் கூறுவது இது. இதனால் இதற்குப் "பாசறை நிலை" என்று பெயர் ஏற்பட்டது.

இதனை விளக்க, பகை வேந்தர் என்னோரும் பணிந்து, அவனது வெண்கொற்றக்குடையின் கீழ் பணிந்துவிட்ட போதும், அவ்விடம் விட்டு நகராமல் மன்னன் பாசறையிலேயே இருப்பது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லாம் மறம்துறப்பவும்"
பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை இருந்தன்று

எடுத்துக்காட்டு

தொகு
கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப்
பெரும்புனல் வாய்திறந்த பின்னும் - கரும்பின்
தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான்
பகைமெலியப் பாசறையு ளான்
- புறப்பொருள் வெண்பாமாலை 52.

குறிப்பு

தொகு
  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 90

உசாத்துணைகள்

தொகு
  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசறை_நிலை&oldid=1551241" இலிருந்து மீள்விக்கப்பட்டது