பாசிடையோமைகோஃபைட்டா பூஞ்சை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (நவம்பர் 2022) |
இவ்வகை பூஞ்சையானது அஸ்கோமைகோட்டாவுடன் இணைந்து டிகார்யா எனும் துணை பூஞ்சை பெருந் தொகுதியை பூஞ்சை பெரும் தொகுதிக்குள் உருவாக்குகிறது. இது அநெக வேளைகளில் உயர் வகை பூஞ்சை தொகுதி எனவும் அறியப் படுகிறது.
குறிப்பாக இப் பெரும் தொகுதியில் கீழ் கண்ட குழுமங்கள் காணப் படுகின்றன: காளான்கள்,பஃப்பந்து காளான்,துர்நாற்ற கொம்பு காளான், அடைப்புக் குறி காளான், உறைகூழ் பூஞ்சை, புவிவிண்மீன் / நட்சத்திர பூஞ்சை, ரஸ்ட் பூஞ்சைகள், பன்ட் பூஞ்சைகள்மற்றும் மனிதனுக்கு நோயுண்டாக்கும் ஈஸ்டான கிரிப்ரடோகாகஸ் போன்றவை ஆகும். பாசிடியோமைகோட்டோ இழை பூஞ்சைகளாகும். இவை பூசணை இழைகளால் ஆனவை. இவை பாலினப் அல்லது இலிங்க இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையவை. இவை இதற்கென்று விசேஷமாக உருவாக்கப் பட்ட உருளை வடிவ செல்களால் பாலினப் பெருக்கம் செய்கின்றன. இந்த செல்கள் பாசிடா என்று அழைக்கப் படுகின்றன. இவை வெளி மியோவித்துகளைக் கொண்டுள்ளன. அவை பொதுவாக நான்கு என்கிற எண்ணிக்கையில் காணப் படும். இந்த தனித் தன்மை வாய்ந்த வித்துக்கள் பாசிடோவித்துக்கள் எனப் படும். சிலவகை பாசிடோமைகோட்டாக்கள் இலிங்கமில் அல்லது பாலிலா இனப் பெருக்கமு மேற்கொள்ளும். சில வகை பூஞ்சைகள் பாலிலா அல்லது இலிங்கமில் இனப் பெருக்கம் மட்டும் மேற் கொள்ளும். இலிங்கமில் முறையில் இனப் பெருக்கம் செய்யப் பட்ட பாசிடோமகோட்டாக்கள் முழுவதும் அல்லது மொத்த ஒத்த பண்புகள் இருந்தால் அவைகள் இந்த சிற்றினத்தைச் சார்ந்தவையாக அடையாளம் காணப் படும். தனித்துவமான உடற்கூறு செல் சுவர்களின் பகுதிகள், மரபுவழிச் சார்பான உறுதியான கட்டமைப்பு மூலம் இவைகளின் தன்மை உறுதி செய்யப் படுகிறது.