பாசுகான் திருவிழா

பாசுகான் திருவிழா (BASCON festival) வடகிழக்கு இந்திய நாட்டின் அருணாச்சலப் பிரதேச மாநிலம், லெபரடா மாவட்டத்தின் தலைமையகமாக இருக்கும் பாசார் என்ற இடத்தில் ஆண்டுதோறும் நவம்பரில் நடைபெறும் திருவிழா ஆகும்.

BASCON festival
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாசாரில் நடைபெறும் பாசுகான் விழாவில் பாரம்பரிய கலோ நடனம் நடைபெற்று வருகிறது.

இத்திருவிழா என்பது உள்ளூர் கலோ பழங்குடியினரின் கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் ஆர்கானிக் திருவிழா ஆகும்.[1] இப்பண்டிகை மூன்று நாள் நடைப்பெறும் நிகழ்வு ஆகும். கலோ பழங்குடியினரின் ஒவ்வொரு உறுப்பினரும் உதவிக் கரம் கொடுக்கும் ஒரு சமூக முயற்சியாகும்.

பின்னணி

தொகு

பாசுகான் திருவிழா என்ற அமைப்பின் சிந்தனையில் உருவானது. குமின் ரெகோ கிலாசு. இது அப்பகுதி மற்றும் கலோ பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படுகிறது.

இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், பாசார் நகருக்கு அருகில் ஹை மற்றும் கிடி என்ற இரண்டு நதிகள் சங்கமிக்கும் கரையில் பாசுகான் திருவிழா நடைபெறுகிறது.

செயல்பாடுகள்

தொகு

பாசுகான் திருவிழா கலோ பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மூன்று நாட்கள் நீண்ட கலாச்சார களியாட்டத்தில் காட்டுகிறது. இந்த விழா நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆண்டு விழாவாகும். கலோ பழங்குடியினரின் பல்வேறு விழாக்களில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பல்வேறு வண்ணமயமான நடனங்கள் திருவிழாவில் வழங்கப்படுகின்றன. திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் நிகழ்த்தப்படும் நடனங்களும் இதில் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "BASCON at Basar, Arunachal Pradesh, India". Voyager. 17 December 2018. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுகான்_திருவிழா&oldid=3665273" இலிருந்து மீள்விக்கப்பட்டது