பாசுபத மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
பாசுபத மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: அருச்சுனனுக்கு பாசுபதம் அருளியது

பாசுபத மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒன்றாவார். [1]

திருவுருவக் காரணம்

தொகு

மகாபாரதப் போரில் சிந்து மன்னனை வெல்ல மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் அர்ஜூனனுக்கு தேவைப்பட்டது. அதனால் கண்ணன் சிவபெருமானின் அருளால் அவ்வாயுதம் கிடைக்கும் என்றும், சிவபெருமானை நோக்கி தவமியற்றவும் அர்ஜூனனுக்கு அறிவுருத்தினார். அத்துடன் தன்னையே சிவபெருமான எண்ணி பூசிக்குமாறும் கூறினார். சிவபெருமானை எண்ணி வழிபட்ட அர்ஜூனனின் பூசையை ஏற்றார் சிவபெருமான்.

கண்ணனும் அர்ஜூனனும் சிவபெருமானைக் காண கையிலை சென்றனர். அங்கு அர்ஜூனன் பூசித்த மலர்கள் சிவபெருமானின் காலடியில் கிடந்தன. அதைக் கண்டு அர்ஜூனன் மகிழ்ந்தார். அர்ஜூனனின் பூசையால் மகி்ழ்ந்த சிவபெருமான் சக்திவாய்ந்த பாசுபாத அஸ்திரத்தினை அளித்தார். இத்திருக்கோலம் பாசுபத மூர்த்தியாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://www.shivamoorthigal64.org/shivamoorthigal.html[தொடர்பிழந்த இணைப்பு] அருள்மிகு திருநீலகண்டேஸ்வரசுவாமி திருக்கோயில் புதுச்சேரி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபத_மூர்த்தி&oldid=3370746" இலிருந்து மீள்விக்கப்பட்டது