பாசுபரசு ஈராக்சைடு
வேதிச்சேர்மம்
பாசுபரசு ஈராக்சைடு (Phosphorus dioxide) என்பது PO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இயங்குறுப்பான இது பாசுபரசின் வாயுநிலை ஆக்சைடாகும். பாசுபரசு மற்றும் பாசுபீனின் ஒளிரும் வேதியியல் தன்மையில் பாசுபரசு ஈராக்சைடு பங்கு வகிக்கிறது.[1] பாசுப்பேட்டுகளை அதிக வெப்பநிலைக்கு சூடாக்கும்போது இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது.[2]
அடி நிலையில் மூலக்கூறு நைட்ரசன் டை ஆக்சைடு போல இது வளைந்திருக்கும். ஆனால் கிளர் நிலையில் நேர்கோட்டு அமைப்பில் உள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Lawrence L. Lohr (Jul 2, 1984). "A theoretical study of the gaseous oxides PO2 and PO, their anions, and their role in the combustion of phosphorus and phosphine". The Journal of Physical Chemistry. doi:10.1021/j150667a022.
- ↑ Bing Deng (Feb 9, 2022). "Rare earth elements from waste". Science Advances 8 (6). doi:10.1126/sciadv.abm3132.