பாசுபினேட்டு

பாசுபினேட்டுகள் (Phosphinates) அல்லது ஐப்போபாசுப்பைட்டுகள் (hypophosphites) என்பவை ஐப்போபாசுபரசு கட்டமைப்பின் கருத்துரு அடிப்படையில் உருவாகும் பாசுபரசு சேர்மங்களைக் குறிக்கும். ஐயுபிஏசி அனைத்து நிலைகளிலும் பாசுபினேட்டு என்றே குறிக்கிறது. நடைமுறையில் கனிமவேதியியல் இனங்களை மட்டும் ஐப்போபாசுபேட்டு என்கின்றனர். சோடியம் ஐப்போபாசுபேட்டு போன்றவை இதற்கு உதாரணங்களாகும். அதேவேளையில் குறிப்பாக கரிமபாசுபரசு சேர்மங்கள் பாசுபினேட்டுகள் எனப்படுகின்றன.

கரிம-பாசுபினேட்டின் பொது கட்டமைப்பு

ஐப்போபாசுபைட்டு

தொகு
 
சோடியம் ஐப்போபாசுபைட்டு

H2PO−2 என்ற வாய்ப்பாடு ஐப்போபாசுபைட்டு அயனியைக் குறிக்கிறது. வெண் பாசுபரசை Ca(OH)2 போன்ற சூடான நீர்த்த காரங்களுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் ஐப்போபாசுபைட்டு உருவாக்கப்படுகிறது:[1]

P4 + 2 Ca(OH)2 + 4 H2O → 2 Ca(H2PO2)2 + 2 H2.

ஐப்போபாசுபைட்டுகள் ஒடுக்கும் முகவர்களாகச் செயல்படுகின்றன :[1]

H
2
PO
2
+ 3OHHPO2−
3
+ 2H2O + 2e

மின்னாற்றலற்ற நிக்கல் முலாம் பூசும் செயல்முறையில் ஐப்போபாசுபைட்டுகள் ஒடுக்கும் முகவர்களாகச் செயல்படுகின்றன. இதனால் நிக்கல் உப்புகளில் இருந்து நிக்கல் வேதியியல் முறையில் படியவைக்கப்படுகிறது [1]. ஐப்போபாசுபைட்டுகள் வெப்பவேதியியல் அடிப்படையில் நிலைப்பத்தன்மையற்ற அயனிகளாகக் கருதப்படுகின்றன. சூடுபடுத்தினால் இவை பாசுப்பேட்டு உப்புகளாகவும் பாசுபீனாகவும் சிதைகின்றன.

2 H
2
PO
2
PH3 + HPO2−
4
.

கரிமபாசுபினேட்டுகள்

தொகு
 
சயனெக்சு 272 எனப்படும் டையால்கைல்பாசுபினிக் அமிலத்தின் வேதிக் கட்டமைப்பு
 
சயனெக்சு 301 எனப்படும் டைதயோபாசுபினிக் அமிலத்தின் வேதிக் கட்டமைப்பு

OP(OR)R2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டில் அமைந்த கரிம பாசுபரசு சேர்மங்கள் கரிமபாசுபினேட்டுகள் எனப்படுகின்றன. மைக்கேலிசு-அர்புசோவ் வினை வழியாக இவை தயாரிக்கப்படுகின்றன. பாசுபினைட்டுகளை P(OR)R2 ஆக்சிசனேற்றம் செய்து பாசுபினேட்டுகளைப் பெறலாம்.

டையால்கைல்பாசுபினிக் அமிலங்கள் என்பவை R2PO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டில் அமைந்த கரிம பாசுபரசு சேர்மங்கள் ஆகும். இங்கு R என்பது ஏதாவது ஒரு ஆல்கைல் குழுவைக் குறிக்கும். அவை நான்முக மூலக்கூற்று வடிவம் கொண்ட பாசுபரசு(V) சேர்மங்களாகும். ஏரோபைன், சயனெக்சு போன்ற வணிகவியல் அடையாளப் பெயரோடு இவை தனித்துப் பிரித்தல் செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தாதுக்களின் வடிநீர்மத்தில் இருந்து உலோக உப்புகளை பிரித்தெடுக்கும் நீர்பகுப்பு உலோகவியலில் இவை பயன்படுகின்றன [2]. உட்பொருள்களின் கரைதிறனை வழங்குவதற்கும் படிகமயமாக்கலை விலக்குவதற்கும் இந்தக் கரிமப் பதிலீட்டுச் சேர்மங்கள் பிரிக்கப்பட்டுள்ளன [3].

டைதயோடையால்கைல் பாசுபினிக் அமிலங்கள் (R2PS2H) என்பவை (RO)2PS2H, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட டையார்கனோடைதயோ பாசுபேட்டுகளுடன் தொடர்புடையனவாகும். உலோகங்களைத் தூய்மையாக்கலில் இவையும் பயன்படுத்தப்படுகின்றன.

நீராற்பகுப்புக்கு நேரெதிராக பாசுபேட்டுகள் செயலாற்றுகின்றன. இதனால் நேரடியான C-P பிணைப்புக்கு எதிராக RO-P இணைப்பு உருவாதலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. J. Svara, N. Weferling, T. Hofmann "Phosphorus Compounds, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2006. எஆசு:10.1002/14356007.a19_545.pub2
  3. I.Yu. Fleitlikh, N.A. Grigorieva, , V.I. Kuz'min, G.L. Pashkov "Redox processes during cobalt extraction with bis(2,4,4-trimethylpentyl)dithiophosphinic acid" Hydrometallurgy 2012, volumes 129–130, pp. 43–49. எஆசு:10.1016/j.hydromet.2012.08.009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபினேட்டு&oldid=2747889" இலிருந்து மீள்விக்கப்பட்டது