பாசுபீனைட்டு
பாசுபீனைட்டுகள் (Phosphinites) என்பவை P(OR)R2 என்ற பொது வாய்ப்பாடைக் கொண்டுள்ள கரிமப்பாசுபரசு சேர்மங்களாகும். ஒருபடித்தான வினையூக்கம் மற்றும் ஒருங்கிணைவு வேதியியலில் இவை ஈந்தணைவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன [1].
தயாரிப்பு
தொகுகரிமப்பாசுபரசு குளோரைடுகளை ஆல்ககால் பகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பாசுபீனைட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, குளோரோடைபீனைல்பாசுபீனுடன் மெத்தனாலும் ஒரு காரமும் சேர்த்து வினைப்படுத்தினால் மெத்தில் டைபீனைல்பாசுபோனைட்டு உருவாகிறது.
- ClPPh2 + CH3OH → CH3OPPh2 + HCl
பாசுபீனசு அமிலத்தினுடைய (R2POH) எசுத்தர்களாக இவை இருந்தாலும் பாசுபீனைட்டுகள் இடைநிலை விளைபொருட்களாகத் தோன்றுவதில்லை.
வினைகள்
தொகுபாசுபீனைட்டுகள் ஆக்சிசனேற்றம் அடைந்து பாசுபினேட்டுகளாக மாறுகின்றன.
2 P(OR)R2 + O2 → 2 OP(OR)R2
பாசுபீனைட்டுகள் ஈந்தணைவிகள் ஆகும். உலோக பாசுபீன் அணைவுச் சேர்மங்களை இவை கொடுக்கின்றன. பாசுபீன் ஈந்தனைவிகளைக் காட்டிலும் இவை வலிமையான pi ஏற்பிகளாகும் [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ D. E. C. Corbridge "Phosphorus: An Outline of its Chemistry, Biochemistry, and Technology" 5th Edition Elsevier: Amsterdam 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-89307-5.
- ↑ T. V. (Babu) Rajanbabu “Phosphinite and Phosphonite Ligands” in Phosphorus(III) Ligands in Homogeneous Catalysis: Design and Synthesis Paul C. J. Kamer and Piet W. N. M. van Leeuwen, Eds., John Wiley & Sons 2012. எஆசு:10.1002/9781118299715.ch5