பாசுபீன் தெலூரைடு
பாசுபீன் தெலூரைடு (Phosphine telluride) R3PTe என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு வகை சேர்மமாகும். மூலக்கூற்று வாய்ப்பாட்டிலுள்ள R என்பது ஆல்கைல் அல்லது அரைல் குழுக்களைக் குறிக்கிறது. கட்டமைப்பில் இவ்வகைச் சேர்மங்கள் பாசுபீன் ஆக்சைடுகள், பாசுபீன் சல்பைடுகள் மற்றும் பாசுபீன் செலீனைடுகளின் கட்டமைப்புகளை ஒத்த சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. இத்தொடரில் இடம்பெற்றுள்ள மற்ற சேர்மங்களைப் போல அல்லாமல் பாசுபீன் தெலூரைடுகள் நிலையற்று சால்கோசனை இழக்கின்றன. இருப்பினும் பல சேர்மங்கள் எக்சு கதிர் படிகவியல் நுட்பத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இதன்படி நான்முகி பாசுபரசு மையமும் பாசுபரசு-தெலூரைடு பிணைப்பு நீளம் 236 பைக்கோமீட்டர்கள் கொண்ட அமைப்பும் பாசுபீன் தெலூரைடுகளில் உள்ளன. [1] பெரும்பாலான பாசுபரசு தெலூரைடுகள் நிறமற்ற திண்மங்களாகும். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jeremias, Lukáš; Babiak, Michal; Kubát, Václav; Calhorda, Maria José; Trávníček, Zdeněk; Novosad, Josef (2014). "Successful Oxidation of Ph2P(CH2)nPPh2 (n = 2, 4, 6) by Tellurium Leading to Ph2P(Te)(CH2)nP(Te)Ph2". RSC Advances 4 (30): 15428. doi:10.1039/C4RA00157E. Bibcode: 2014RSCAd...415428J.
- ↑ Jones, C. H. W.; Sharma, R. D. (1987). "Tellurium-125 NMR and Moessbauer Spectroscopy of Tellurium-Phosphine Complexes and the Tellurocyanates". Organometallics 6 (7): 1419–1423. doi:10.1021/om00150a009.