பாசுபேட்டாற்பகுப்பு

பாசுபேட்டாற்பகுப்பு (Phosphorolysis) என்பது கனிம பாசுபேட்டை தாக்கும் குழுவாகப் பயன்படுத்தி ஒரு சேர்மத்தை பிளக்கும் செயல் முறையாகும். நீராற்பகுப்பு வினையை ஒத்த ஒரு வினையே பாசுப்பேட்டாற் பகுப்பு வினையாகும்[1].

கிளைக்கோசனை கிளைக்கோசன் பாசுபோரைலேசாக பிளக்கும் வினையை இதற்குறிய எடுத்துக்காட்டு வினையாகக் குறிப்பிடலாம். கிளைக்கோசன் மூலக்கூறின் ஒடுக்கமடையாத முனையில் உள்ள விளிம்புநிலை கிளைக்கோசன் எச்சத்தை கனிம பாசுபேட்டு தாக்குவதை இது வினையூக்கம் செய்கிறது. ஒருவேளை கிளைக்கோசன் சங்கிலியில் என்–குளுக்கோசு அலகுகள் இருக்குமெனில், தனி பாசுபேட்டாற் பகுப்பு வினையினால் ஒரு குளூக்கோசு1-பாசுபேட்டு மூலக்கூறும் எஞ்சியிருக்கும் குளுக்கோசு அலகின் என்-1 , கிளைக்கோசனும் விளைபொருள்களாகின்றன.

கிளைக்கோசன் மீது கிளைக்கோன் பாசுபோரைலேசின் செயற்பாடு

கூடுதலாக, சிலசமயங்களில் நீராற்பகுப்பைக் காட்டிலும் பாசுபேட்டாற் பகுப்பு விரும்பப்படுகிறது. (கிளைக்கோசன் அல்லது சிடார்ச்சு உள்ளிட்டவற்றின் மேற்கூறிய செயல்முறை போல) ஏனெனில் தனி குளுக்கோசு அலகைக் காட்டிலும் குளுக்கோசு 1-பாசுபேட்டு அதிக அளவு அடினோசின் டிரை பாசுபேட்டைக் கொடுக்கிறது.

கிளைசெரால்டிகைடு 3-பாசுபேட்டை 1,3-பிசுபாசுபோகிளைசரேட்டாக மாற்றுகின்ற கிளைக்கோசாற் பகுப்பு வினை இதற்கு மற்றொரு உதாரணமாகும். இவ்வினையின் வினைவழிமுறையில் பாசுப்பேட்டாற் பகுப்பின் பங்கேற்பு இடம்பெறுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. Stryer, L. (1988) Biochemistry, 3rd ed., Freeman (p. 451)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபேட்டாற்பகுப்பு&oldid=2750008" இருந்து மீள்விக்கப்பட்டது