பாசுபேட்டு சோதனை

கரைசலில் உள்ள பாசுபேட்டு அயனிகளைக்(PO43-) கண்டறிய பல தரமறிச் சோதனைகள் மற்றும் அளவறிச் சோதனைகள் உள்ளன. இத்தகைய சோதனைகள் தொழில்முறை செயல்முறைகளிலும், அறிவியல் ஆய்வுகளிலும் சூழலியலைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது.

பாசுபேட்டு(PO43-) சோதனை
வகுப்புநிறமறிச் சோதனை
பகுப்பாய்வுக் கூறுகள்பாசுபேட்டு

அளவறிச் சோதனை

தொகு

கொதிகலன்களில் பயன்படுத்தப்படும் நீரில் உள்ள பாசுபேட்டின் அளவினைக் கண்டறியப் பயன்படும் சோதனையானது பின்வருமாறு: ஒரு அளந்தறியப்பட்ட அளவு கொதிநீரானது ஒரு கலக்கும் குழாயில் ஊற்றப்பட்டு அதோடு அம்மோனியம் எப்டாமாலிப்டேட்டு சேர்க்கப்படுகிறது. இந்தக் குழாயானது ஒரு அடைப்பானால் அடைக்கப்பட்டு தீவிரமாக குலுக்கப்படுகிறது. இதன் அடுத்த படியாக நீர்த்த இசுடானசு குளோரைடு காரணியானது (இசுடானசு குளோரைடின் செறிவான கரைசலுடன் வாலைவடிநீருடன் சேர்க்கப்பட்டு புதிதாகத் தயாரிக்கப்பட்டது) குழாயில் உள்ள கலவையுடன் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாலிப்டினம் நீலம் என்ற ஒரு சேர்மம் உருவாவதன் காரணமாக ஒரு நீல நிறம் உருவாகிறது. நீல நிறத்தின் அடர்த்தியை வைத்து கொதிநீரில் உள்ள பாசுபேட்டின் அளவினை உணர்த்துகிறது. நீல நிறக் கரைசலின் ஏற்பினை நிறமானி மற்றும் அசல் கரைசலில் பாசுபேட்டின் செறிவு ஆகியவற்றை வைத்துக் கணக்கிடலாம். மாற்றாக, பாசுபேட்டின் செறிவைக் காண லவிபாண்ட் ஒப்பீட்டளவி பயன்படுகிறது. இது ஒரு நேரடியான (ஆனால் தோராயமான) முறையாகும். பாசுபேட்டின் இருப்பின் அளவினைக் கண்டறியப் பயன்படும் இந்த முறையானது டெனிஜெசின் முறை என அழைக்கப்படுகிறது.[1] [2] [3]

பண்பறி பகுப்பாய்வு முறை

தொகு

பாசுபேட்டு அயனிகளின் இருப்பினைக் கண்டறியப் பயன்படும ஒரு எளிய பண்பறி பகுப்பாய்வு முறையானது பின்வருமாறு: பாசுபேட்டின் இருப்பு கண்டறியப்பட வேண்டிய மாதிரியானது சிறிதளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த மாதிரியானது அடர் நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து அமிலத்தன்மை உடையதாக மாற்றப்படுகிறது. இதனுடன் சிறிதளவு அம்மோனியம் மாலிப்டேட்டானது சேர்க்கப்படுகிறது. அம்மோனியம் பாசுபோமாலிப்டேட்டின் பிரகாசமான மஞ்சள் நிற வீழ்படிவானது பாசுபேட்டு அயனியின் இருப்பினை உணர்த்துகிறது. மென்மையாக வெப்பப்படுத்துவது வீழ்படிவு தோன்றுவதை அதிகரிக்கும். இதே சோதனையானது ஆர்சனிக்கைக் கண்டறியவும் பயன்படுகிறது. ஆர்சனிக்கிற்கான சோதனையில் மஞ்சள் நிற வீழ்படிவு தோன்றுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Wiley Interscience
  2. http://www.wiredchemist.com/chemistry/instructional/laboratory-tutorials/qualitative-analysis
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபேட்டு_சோதனை&oldid=3562600" இலிருந்து மீள்விக்கப்பட்டது