பாச்சர்முறை

பாஸ்டுரைசேசன் (pasteurization) என்பது இதமான வெப்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை, குறிப்பாக திரவ நிலையில் உள்ள பொருட்களை பதப்படுத்தப் பயன்படும் முறை ஆகும். இந்த முறையானது கிருமி நீக்க முறையில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்த முறையின் முக்கிய நோக்கம் உணவில் உள்ள அணைத்து நுண்ணுயிரிகளையும் அழிப்பது இல்லை. நோய் உண்டாக காரணமாக உள்ள கிருமிகளையும் உணவு பொருள் கெட்டுப்போக காரணமாக உள்ள நுண்ணுயிரிகளையும் அழிப்பதே ஆகும். பொதுவாக கிருமி நீக்கம் செய்ய அதிக வெப்பத்தினை 121.1 C பயன்படுத்துவர். ஆனால் பெரும்பான்மையான உணவு பொருட்களில் இந்த வெப்பத்தை பயன்படுத்தும் பொழுது அதன் சுவையும் தன்மையும் மாறிவிடும். பாஸ்டுரைசேசன் முறையானது பிரான்ஸ் நாட்டை சார்ந்த லூயிஸ் பாஸ்டர் என்பவரால் 1864 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவரது காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ள திராட்சை ரசம் தயாரிக்கும் ஆலைகளில் நுண்ணுயிரிகளால் அதிகம் அதன் அழிக்கப்பட்டு அதன் தரம் குறைந்து கொண்டிருந்தது. லூயிஸ் பாஸ்டர் தனது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக திராட்சை ரசத்தினை பதப்படுதுவதற்கான வெப்ப நிலையை கண்டறிந்தார். (50 C-60 C). இந்த வெப்ப நிலையில் பெரும்பான்மையான நோய் ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளும், திராட்சை ரசத்தினை கெட்டுப்போக செய்த நுண்ணுயிரிகளும் அழிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். தற்பொழுது இந்த முறையினைப் பயன்படுத்தி பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய், பழரசங்கள், பீர் போன்ற பல வகையான உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Fellows, P. J. (2017). Food Processing Technology Principles and Practice. Woodhead Publishing Series in Food Science, Technology and Nutrition. pp. 563–578. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-101907-8.
  2. Tewari, Gaurav; Juneja, Vijay K. (2007). Advances in Thermal and Non-Thermal Food Preservation. Blackwell Publishing. pp. 3, 96, 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813829685.
  3. "Heat Treatments and Pasteurisation". milkfacts.info. Archived from the original on 5 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாச்சர்முறை&oldid=4100646" இலிருந்து மீள்விக்கப்பட்டது