பாஞ்சாலி சபதம்

1912இல் பாரதியார் இயற்றியக் காப்பியம்

மகாபாரதக்கதையைப் பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரதத் தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.

பாஞ்சாலி சபதம்
நூலாசிரியர்சுப்பிரமணிய பாரதி
மொழிதமிழ்

சிந்து என்னும் பா வகையில் ஆக்கப்பட்ட இந்நூல் எளிய தமிழ்நடையினைக் கொண்டது.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சாலி_சபதம்&oldid=3202064" இலிருந்து மீள்விக்கப்பட்டது