பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் அருகேயுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
துவக்கம்
தொகுபாடகச்சேரி சுவாமிகள் முத்துப்பிள்ளை மண்டபத்தில் சுவாமிகள் தங்கியிருந்தபோது யோக மார்க்கத்தில் சென்றார். அவர் அங்கிருந்தபோது ஊரில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடியது. அங்கு அவர் ‘கூழ்சாலை” ஒன்றைத் துவங்கி மக்களின் பசித்துயர் போக்கும் பணியினை மேற்கொண்டார். [2] தற்போது இந்த கூழ்சாலையில் எரிதாதா சுவாமிகள் சன்னதி, சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான சபை, சத்திய தரும சாலை, சத்திய வேத வைத்திய சாலை ஆகியவை அமைந்துள்ளன. கூழ்சாலை வளாகத்தில் எரிதாதா சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன.
எரிதாதா சுவாமிகள் சன்னதி
தொகுஎரிதாதா என்றும் எரிசாமி என்றும் அழைக்கப்படுகின்ற சன்னதியில் எரிதாதாவிற்கு முன்பாக வலது புறத்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளும், இடது புறத்தில் விவேகானந்தரும் உள்ளனர். அவர்களுக்கு எதிராக பைரவரைக் குறிக்கின்ற நாய் மற்றும் பறவை சிலைகள் உள்ளன. இச்சன்னதியின் பின் புறம் எலந்தை மரம் உள்ளது.
சத்திய ஞான சபை
தொகுகூழ்சாலை வளாகத்தில் சத்திய ஞான சபை உள்ளது. அந்த சபையில் மூன்று தியான அறையும், ஒரு குண்டலி அறையும் உள்ளன. அறையில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் சிலை உள்ளது.
பூசைகள்
தொகுகூழ்சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை குருவார பூஜை, பௌர்ணமி பூஜை, தைப்பூச விழா, மாசி மகம் விழா, ஆடிப்பூரம் குரு பூஜை, விஜய தசமி, பூஜை, சாமண்ணா குரு பூஜை, எரிதாதா சுவாமிகள் குரு பூஜை, திருவாதிரை பூஜை மற்றும் அருள்மிகு நடராஜ சுவாமிகள் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றன.
நடராசர் சன்னதி
தொகுகூழ்சாலையின் மற்றொரு வாயிலின் எதிரில் நடராசர் கோயில் உள்ளது. கருவறையில் நடராசர் திருமேனி உள்ளது. அக்கோயில் 17.1.2014 அன்று குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
- ↑ குரு மகான் தரிசனம் 12 : ஶ்ரீ பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், காமதேனு, 30 ஆகஸ்டு 2018[தொடர்பிழந்த இணைப்பு]