பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

அங்காள பரமேஸ்வரி ஆலயம் 52 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவிலிருந்து அகதிகளாக சென்னை செங்குன்றம் அருகில் உள்ள பாடியநல்லூர் கிராமத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் உருவாக்கிய கோவில். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும். ஓவ்வொரு பகுதியை சார்ந்தவர்கள் அம்மனை தங்கள் பகுதிக்கு அழைத்து செல்வர். கடைசி நாள் தீமிதி நடைபெரும். அந்த நாளில் அருகில் உள்ள பல இடங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்வர்.