பாணதீர்த்தம் அருவி

தமிழ்நாட்டில் இருக்கும் அருவி

பாணதீர்த்தம் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட காரையார் அணை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.

பாணதீர்த்தம் அருவி
பாணதீர்த்தம் அருவி
அமைவிடம்காரையார்

அமைவிடம் தொகு

இது பாபநாசத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், காரையார் அணை அருகே அமைந்துள்ளது.

சுற்றுலா தொகு

அகத்தியர் அருவியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

போக்குவரத்து தொகு

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து காரையார் அணைக்கு பேருந்து வசதி உள்ளது.காரையார் அணையிலிருந்து படகில் 15 நிமிட பயணத்திற்கு பிறகு அருவியை அடையலாம். படகில் சென்று வர கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணதீர்த்தம்_அருவி&oldid=3629416" இலிருந்து மீள்விக்கப்பட்டது