பாண்டரங்கம்
பாண்டரங்கம் என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று.
சிவபெருமான் மூவெயில் முறுக்கியவன் எனபது ஒரு கதை.
மூன்று கோட்டைகளை அவன் தன் நெற்றிக் கண்ணால் எரித்தானாம். அதனை எரித்த சாம்பலைத் தன் மேனியெல்லாம் பூசிக்கொண்டு சுடுகாட்டில் தாண்டவம் ஆடினானாம். பாண்டு என்பது வெள்ளை நிறம்.[1]
வெள்ளைநிறச் சாம்பல் காட்டை அரங்க மேடையாகக் கொண்டு ஆடும் ஆட்டம் 'பாண்டரங்கம்'
சிவபெருமானுக்கு எட்டுக் கைகளாம். ஒரு கையால் துடி முழக்குவானாம். இரண்டு கைகளால் தோளில் தொங்கும் முழவை முழக்குவானாம். இப்படிப் பல இசைக்கருவிகளை முழக்கிக்கொண்டு, பல வகையான உருவங்களைக் காட்டி அவன் பாண்டரங்க நடனம் ஆடுவானாம்.[2]