பாண்டிக்கோவை
பாண்டிக்கோவை என்னும் நூலின் பாடல்கள் இறையனார் களவியல் நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையில் மேற்கோள் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. மதுரையிலிருந்துகொண்டு நாடாண்ட பாண்டியன் ‘அரிகேசரி நெல்வேலி வென்ற நெடுமாறன்’ இதன் பாட்டுடைத் தலைவன். இவன் திருஞான சம்பந்தர் காலத்தவன். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு. நக்கீரர் எழுதிய களவியல் உரை 10-ஆம் நூற்றாண்டு. இந்த நூலின் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாக இங்குத் தரப்படுகின்றன.
- ‘வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுடின் ஓடவைவேல்
- கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின்
- ஒண்துறை மேலுள்ள மோடிய தோஅன்றி யுற்றதுண்டோ
- தண்துறை வாசிந்தை வாடிட என்னீ தளர்கின்றதே.’ (23)
- ‘தெவ்வா யெதிர்நின்ற சேரலர் கோனைச் செருக்கழித்துக்
- கைவானி தியமெல் லாமுட னேகடை யற்கவர்ந்த
- நெய்வா யயினெடு மாறன் பகைபோல் நினைந்துபண்டை
- ஒவ்வா வுருவம் ஒழியுமென் னோவள்ள லுள்ளியதே.’ (24)
கருவிநூல்
தொகு- இறையனார் களவியல் நக்கீரர் உரை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005