பாண்டியன்-மனைவி (கம்பர் காலம்)

கம்பர் காலப் பாண்டின் மனைவி பாடியதாக இரண்டு பாடல்கள் பதிவில் உள்ளன.[1] தன் கணவன் பாண்டியன் பரத்தையரோடு உறவுகொண்டிருந்ததைக் கண்டிக்கும் பாடல்களாக அவை உள்ளன.

  • வேண்டியபோதெல்லாம் இன்பம் விளைவிக்கும் கையால் என்னைத் தொடாதே. ஏதாவது சொல்லவேண்டும் என்றால் என்னுடைய முகத்தைப் பார்த்துத் தூரத்தே நின்றுகொண்டு சொல் என்கிறாள் பாண்டியனின் மனைவி.[2]
  • துணியால் முலையை மூடிக்கொண்டு கண்வலைக்குள் சிக்கவைப்பவர்கள் விலைமாதர். அவர்கள் சொல்லி உன்னை என்னிடம் அனுப்பிவைத்தார்களோ? ஆயின் அவர்களை அணைத்த பாவக்குறை தீரும்படிக் கங்கையாற்றில் நீராடிவிட்டு என்னிடம் வா என்கிறாள் அவள்.[3]

அடிக்குறிப்பு தொகு

  1. தனிப்பாடல் திரட்டு நூல், பக்கம் 45-54 பாடல் எண் 68, 69
  2. வேண்டிய போதின்பம் விளைக்கு மடந்தையரைத்
    தீண்டிய கையா லென்னைத் தீண்டாதே- பாண்டியா
    முல்லைக் கதிபா முகம்பார்த் தகலநின்று
    சொல்லக் கடவதெல்லாஞ் சொல்.(68)

  3. கலையான் முலைமூடிக் கண்வலைக்குள் ளாக்கும்
    விலைமாதர் தாம்வர விட்டாரோ- விலைமாதர்
    கொங்கையிலே தோய்ந்த குறைதீரத் துய்யசிவ
    கங்கையிலே நீராடி வா. (69)