பாண்டியன் கல்
கேரளத்தின் காசர்கோடு மாவட்டதில் கடலில் உள்ள பாறை
பாண்டியன் கல் (Pandiyan Kallu) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், காசர்கோடு மாவட்டத்தில் திருகநாட் கோயிலில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் கடலில் உள்ள ஒரு பெரிய பாறை ஆகும். இந்தப் பாறை சாகச நீச்சல் வீர்ர்களுக்கு சவாலான ஒரு இடமாகும்.
இங்கு நிலவும் ஒரு நாட்டார் கதையின் படி இந்தப் பாறை பாண்டிய மன்னனின் கப்பல் என்றும், திருகநாட் கோயிலை தாக்கிய இந்த கப்பல் கல்லாக மாறியது என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே இது பாண்டியன் கல்லு என்று அழைக்கப்படுகிறது.[1]