பாண்டியன் கீரஞ்சாத்தன்
பாண்டியன் கீரஞ்சாத்தன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். பாண்டியனின் படைத்தலைவனாக விளங்கியதால் கீரஞ்சாத்தன் என்னும் பெயருடன் பாண்டியன் என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது, ஆவூர் மூலங்கிழார் இவனைப் பாடியுள்ளார். புலமை சான்ற பெருமக்கள் இவனை நாடும்போது அவர்கள் பசி இல்லாமல் இருந்து தன்னொடு சேர்ந்து உண்ண மறுத்தால், தானும் உண்ணமாட்டேன் என்று சூளுரை கூறித் தன்னுடன் சேர்ந்து உண்ணும்படிச் செய்யும் பண்பு மிக்கவன் இவன். [1]
இத்தகைய இனிய சாயலைக் கொண்ட இவன் நாட்டைக் காக்கும் போர் வீரர்கள் கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும்போது தான் "நான் காப்பேன்" என்னும் சூளுரையுடன் முன் சென்று காப்பாற்றுவான். [2]