பாண்டியன் பன்னாடு தந்தான்

பாண்டியன் பன்னாடு தந்தான் சங்ககால மன்னன் மற்றும் புலவன். இவன் பாடியதாக ஒரே ஒரு பாடல் குறுந்தொகை 270ஆம் பாடலாக அமைந்துள்ளது.

பாடல் சொல்லும் செய்திதொகு

போர்வினை முற்றுப்பெற்றபின் இல்லம் மீண்ட தலைமகன் தலைவியோடு இருந்துகொண்டு இப்படிச் சொல்கிறான்.

பெருமழையே! இனி பெய்க! நான் மனைவியின் கூந்தலில் குவளைமணம் கமழ்வதை முகர்ந்துகொண்டே துயில்வேன், என்கிறான்.

பழந்தமிழ்
பெருவான் இருள் துமிய மின்னிப் பொழிக!
ஊழில் கடிப்பு இகுத்து முழங்கும் முரசு போல் இடி முழங்கிப் பொழிக!