பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள்
பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள் எனப்படுபவை பராந்தக வீரநாராயணன் (கிபி 887) என்னும் பாண்டிய அரசனால் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்
வடிவமைப்பு
தொகு"இச் செப்பேடு, முனைகள் தட்டிச் சமன்படுத்திப் பிணைக்கப்பெற்ற வளையத்தில் கோக்கப்பெற்றுள்ள ஏழு இதழ்களைக் கொண்டுள்ளது. இதழ்கள் 18 அங்குல நீளமும் 5 1/2 அங்குல அகலமும் உடையவை. முத்திரை. செப்பேடுகளுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. முத்திரையில் மீனிரட்டை, புலி ஆகிய இரண்டு சின்ங்கள் கீழே ஒரு உருவில் பொறிக்கப்பட்டுள்ளது."[1]
மொழி
தொகுஇச் செப்பேட்டின் 238 வரிகளை உடையது. முதல் 65 வரிகள் வடமொழில் உள்ளன. கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. 173 வரிகள் தமிழில் உள்ளன. இவை தமிழ் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன.
செய்தி
தொகுபல்வேறு இந்துப் புராணக் கதைகளும் வரலாற்றுச் செய்திகளும் இந்தச் செய்ப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ வே. மகாதேவன். (2009). கல்வெட்டுக்கள்: வினா-விடை விளக்கம். சென்னை: சேகர் பதிப்பகம்.
உசாத்துணைகள்
தொகு- வே. மகாதேவன். (2009). கல்வெட்டுக்கள்: வினா-விடை விளக்கம். சென்னை: சேகர் பதிப்பகம்.