பாண்டியன் வங்கி
பாண்டியன் வங்கி (Pandyan Bank) தமிழ்நாட்டின் மதுரையில் 1946ஆம் ஆண்டு திசம்பர் 11 அன்று எஸ்.என்.கே.சுந்தரம் அவர்களால் நிறுவப்பட்ட தனியார்த்துறை வங்கியாகும்.[1] இதனை கனரா வங்கி 1963இல் கையகப்படுத்தியது.
பாண்டியன் வங்கி பல புதுமைகளை அறிமுகப்படுத்தியது; சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகங்களுக்கு நெகிழியாலான பொதிகளை வழங்கியது. 1947ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக மதுரை டவுன்ஹால் கிளையை அனைத்து மகளிர் கிளையாக உருவாக்கியது. இங்கு பணிபுரிந்த பத்து பெண்களில் நிறுவனர் சுந்தரத்தின் மகளான கமலா சுந்தரமும் ஒருவராவார்.[2]
திசம்பர் 2, 1963இல் கனரா வங்கியுடனான இணைப்பு செயலாக்கத்திற்கு வந்தது. கையகப்படுத்தப்படும்போது பாண்டியன் வங்கிக்கு 800 பணியாளர்களும் 83 கிளைகளும் இருந்தன.[1]