பாண்டியர் பாடிய நூல்கள்
பதினைந்து முதல் பதினேழாம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டி நாடு தலைநகர் மதுரையை இழந்து கொற்கை, கருவை, தென்காசி ஆகிய தலைநகரங்களில் சிதருண்டு கிடந்தது. சிதருண்டு கிடந்த சிற்றரசு பாண்டியர் செந்தமிழ் நூல்கள் பல யாத்தனர். [1] அவை
எண் | நூல் | ஆசிரியர் வழக்கு | நூல் கூறும் ஆசிரியர் பெயர் | குரு |
---|---|---|---|---|
1 | இலிங்க புராணம் | வரகுணராமன் | பாண்டியன் குலசேகரன் | அகோர சிவம் |
2 | வாயு சங்கிதை (புராணம்) | வரகுணராமன் | பாண்டியன் குலசேகரன் வரகுணராமன் | சுவாமி தேசிகர் |
3 | அம்பிகை மாலை | வரகுணராமன் | குலசேகரன் | - |
4 | பிரமோத்தர காண்டம் (புராணம்) | வரதுங்கராமன் | வரதுங்கராமன் | ஈசான முனிவர் |
5 | திருக்கருவை அந்தாதிகள் (3) | வரதுங்கராமன் | - | - |
6 | கொக்கோகம் | வரதுங்கராமன் | - | - |
7 | நைடதம் | அதிவீரராமன் | அதிவீரராமன் | சுவாமி தேவர் |
8 | வெற்றிவேற்கை | அதிவீரராமன் | வீர்ராமன் குலசேகரன் | - |
9 | கூர்ம புராணம் | அதிவீரராமன் | அதிவீர பூபதி | சுவாமி தேவர் |
10 | காசி கண்டம் | அதிவீரராமன் | அதிவீரராமன் | சுவாமி தேவர் |
மேலும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help)