பாண்டி மேளம்

பாண்டி மேளம் என்பது மரபார்ந்த மேளதாள தட்டியோலிக்கும் இசைக்கச்சேரியாகும் அல்லது மேளக்கச்சேரி (குழுமம்), இக்கச்சேரியில் கேரளத்தில் பரம்பரை பரம்பரையாக உபயோகித்துவரும் செண்டை என்ற வாத்தியத்தை அடித்து ஒலிகிளப்ப, பக்க வாத்தியமாக இலதாளம் (ஜாலரா), குழல் மற்றும் கொம்பு என அறியப்படும் இசைக்கருவிகள் அல்லது வாத்தியங்களால் இசைக்கப்படுகின்றன.

பாண்டி மேளம்

ஒரு முழு நீள பாண்டி கச்சேரியில், ஒரு வகையான மேளத்தை அடிப்படையாகக் கொண்ட தாளம் பயன்படுத்தப் படுகிறது. தாள் ஏழு அடிகள் கொண்டது, இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் நடைபெறும். உற்சவ நாட்களில் ஆலயங்களுக்கு வெளியே தனிப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன. இந்த கச்சேரி அடிப்படையாக நான்கு கட்டங்களை கொண்டது, ஒவ்வொன்றும் ஒத்திசைக்குந்தன்மையுடன் கூடிய தாளங்கள் கொண்டு சுழற்சியில் வருவதாகும், இந்த தாளவட்டம் (சுழற்சி) மொத்தமாக முறையே 56, 28, 14 மற்றும் ஏழு என்ற வகையில் ஒவ்வொரு கட்டத்திலும் அமைந்திருக்கும்.

மத்திய கேரளத்தில் த்ரிஸ்ஸூர் என்ற நகரத்தில் உள்ள வடக்குன்னாதன் கோவிலை சுற்றி உட்புறம் அமைந்த வளாகத்தில் கேரளத்தில் மிகவும் உற்சாகத்துடன் பாண்டிமேள உற்சவம் கொண்டாடப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக , பெருவனம் குட்டன் மாறார் என்பவர் இந்த ஒத்தினி இசைக்குத் தலைமை நடத்துனராக பனி புரிந்து வருகிறார், இந்த மேளங்களால் இசைக்கப்படும் ஒத்தினி இசை கேரளத்தில் எளஞ்சிதர மேளம் எனவும் அறியப்படுகிறது.இதர இடங்களில், ஆறாட்டுபுழா மற்றும் த்ரிஸ்ஸூர் அருகிலுள்ள பெருவனம் ஆகிய இடங்களில் நடைபெறும் பூரம் உற்சவம் மற்றும் இதர மத்திய மற்றும் வடக்கு கேரளத்தில் நடக்கும் உற்சவங்களில், இந்த கச்சேரி கோவிலின் வெளியே நடத்தப்படுகிறது.

இந்த இசையைப் போன்ற இன்னொரு தொகுப்பு, பஞ்சரி மேளம் என அறியப்படுவது, இதுவும் பாண்டி மேளத்தைப் போலவே வாத்தியங்களைக் கொண்டுள்ளது ஆனால் இசையின் வடிவங்களில் மற்றும் அளிக்கப்படும் முறைகளில் பெரும் வேறுபாடுகள் காணப்படுவது, பொதுவாக கோவிலின் உட்புற வளாகத்திலேயே நடத்தப் படுவதாகும்.இந்த வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்த கலைஞர்கள், (ஊயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள்) இவ்விரு கலைகளிலும் வித்தகர்களாக திகழ்கின்றனர்.

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டி_மேளம்&oldid=1355043" இலிருந்து மீள்விக்கப்பட்டது