பாதரச நச்சு

பாதரசத்தால் உண்டாகும் வேதி நச்சு

பாதரச நச்சு என்பது உலோக நச்சுகளில் ஒரு வகையாகும். இது பாதரசம் என்ற உலோகத்தினால் ஏற்படக்கூடியது. இந்த நச்சினால் ஏற்படும் விளைவுகள் அந்த உலோகத்தின் தன்மை, அளவு, மற்றும் வெளிப்பட்ட கால இடைவெளி ஆகியவற்றை பொறுத்தது.

ஏற்படும் விளைவுகள் தொகு

இந்த பாதரச நச்சினால் தசை தளர்வு, கை, மற்றும் கால்களில் அரிப்புத்தன்மை, தோல் தடிப்புகள், மயக்கம், பேசுவதில் சிரமம், கேட்பதில் பிரச்சனை, பார்வைக் கோளாறு போன்றவை ஏற்படும்.

மெத்தில் மெர்குரி வெளிபாட்டினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயின் பெயர் பிங்க் நோய் எனப்படுகிறது. இதனால் குழந்தைகளின் தோலில் நிறமாற்றம் ஏற்பட்டு தோல் உரிகிறது; சிறுநீரக கோளாறுகளைக் கொண்ட நீண்ட நாள் பிரச்சனை ஆகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச_நச்சு&oldid=2592930" இலிருந்து மீள்விக்கப்பட்டது