பாதரச நைட்ரைடு
பாதரச நைட்ரைடு (Mercury nitride) பாதரச நேர்மின் அயனிகளும் நைட்ரிடோ எதிர்மின் அயனிகளும் சேர்ந்து உருவாகும் வேதியல் சேர்மங்களாகும். Hg3N2, போன்ற விகிதவியல் அளவு இரட்டை பாதரச நைட்ரைடுகள் சரியாக வரையறுக்கப்படவில்லை. சாதாரண நிபந்தனைகளில் குறுகிய கட்டத்தில் இவை நிலைப்புத்தன்மையுடன் உள்ளன. [Hg2N](NO3) என்ற அணைவு வடிவத்தில் ஒரு பாதரச நைட்ரைடு அறியப்பட்டுள்ளது. இந்தச் சிவப்பு நிற திண்மம் வலைக் கட்டமைப்பை ஏற்கிறது, நைட்ரேட்டு ஈந்தணைவிகளால் பிணைக்கப்பட்ட NHg4 நான்முகங்களால் இவ்வலைக் கட்டமைப்பு ஆக்கப்பட்டுள்ளது[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Peter Nockemann, Gerd Meyer "Bildung von NH4[Hg3(NH)2](NO3)3 und Umwandlung in [Hg2N](NO3)" Zeitschrift für anorganische und allgemeine Chemie 2002, Volume 628, pages 2709–2714. எஆசு:<2709::AID-ZAAC2709>3.0.CO;2-P 10.1002/1521-3749(200212)628:12<2709::AID-ZAAC2709>3.0.CO;2-P