பாதுகாப்பு மீதரவு: செயற்படுத்தல் வியூகங்கள்
பாதுகாப்பு மீதரவு: செயற்படுத்தல் வியூகங்கள் (ஆங்கிலம்: PREservation Metadata: Implementation Strategies (PREMIS)) என்பது எண்ணிமப் பாதுகாப்புக்குப் பயன்படும் மீதரவுகள் (நிர்வாக, நுட்ப, உரிமைகள்/தோற்றமுதல், சில கட்டமைப்பு மீதரவுகள்) தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவென உருவாக்கப்பட்ட ஒர் அனைத்துலக பணிக் குழு ஆகும். இந்த அமைப்பு பாதுகாப்பு மீதரவு: செயற்படுத்தல் வியூகங்களுக்கான தரவு அகராதி என்ற மீதரவு வழிகாட்டியை வெளியிடுகிறது. இந்த வழிகாட்டி எல்லா வகை உள்ளடக்கங்களையும் நெடுங்காலம் பாதுகாக்கத் தேவையான அடிப்படை மீதரவு உறுப்புகளை விபரிக்கின்றது. பிறமிசு (PREMIS) எனப்படும் இதன் ஆங்கிலச் சுருக்கம், இந்த அமைப்பையும், இந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட மேற்கண்ட மீதரவு வழிகாட்டலையும் ஒருங்கே குறிக்கிறது.
பிறமிசு காங்கிரசு நூலகம் ஆதரவில் பராமரிக்கப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. பிறமிசு தரவு அகராதியின் முதல் பதிப்பு 2005 இலும், இரண்டாம் பதிப்பு 2008 இலும் மூன்றாம் பதிப்பு சூன் 2015 இல் வெளியிடப்பட்டது. எண்ணிமப் பாதுகாப்பு மீதரவுகளுக்கான ஓர் அனைத்துலக சீர்தரம் போன்ற ஒரு நிலையை பிறமிசு எட்டி உள்ளது.
பிறமிசின் நோக்கம்
தொகு- பாதுகாப்பு மீதரவு தொடர்பாக சிந்திக்க, ஒழுங்குபடுத்த பயன்படக் கூடிய ஒரு பொது தரவு மாதிரி
- குறிப்பான தொழில்நுட்பத்தை, கட்டமைப்பை, உள்ளடக்க வகையை அலல்து பாதுகாப்பு வியூகத்தை ஊகிக்காத, ஒரு பொதுவான சட்டகம், செயற்படுத்தலுக்கான வழிகாட்டல்
- களஞ்சியங்கள் தம்மிடையே பாதுகாப்பு மீதரவை பகிரக்கூடியதற்கான பரிமாற்ற சீர்தரம் [1]
- மீள்பயன்படத்தக் கூடிய கருவிகள்
- தானியக்கம்
பிறமிசின் வடிவமைப்பு
தொகுபிறமிசு பாதுகாப்புச் செயற்பாடுகளுக்குத் தேவையான மீதரவுகள் பற்றி சிந்திக்க ஒருங்கிணைக்க ஒரு பொது தரவு மாதிரியை முன்வைக்கின்றது. இந்தத் தரவு மாதிரி பல்வேறு உருபொருட்களைக் (entities) கொண்டுள்ளது. சொற்பொருள் அலகுகள் (semantic units) இந்த உருப்பொருட்களை விபரிக்கின்றன. பிறமிசு தரவு அகராதி இந்த சொற்பொருள் அலகுகளை துல்லியமாக வரையறை செய்கின்றது.[2]
சொற்பொருள் அலகு (Semantic Unit) என்பது ஒரு இசுகீமாவில் வரையறை செய்யப்படும் மீதரவு உறுப்பில் (Metadata Element) இருந்து நுணுக்காக வேறுபாடு செய்யப்படுகின்றது. சொற்பொருள் அலகு ஒரு களஞ்சியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல் ஆகும். மீதரவு உறுப்பு என்பது அந்தத் தகவல் குறிப்பாக எப்படி பதிவு செய்யப்படுதல் என்பதாகும்.[3] குறிப்பான தொழில்நுட்பத்தை முன்வைக்காமல் ஒரு பொதுவான சட்டகத்தை முன்வைப்பதற்கான இந்த வேறுபாடு பேணப்படுகின்றது.
பிறமிசு ஒரு குறிப்பான எந்தவொரு தொழில்நுட்பத்தை, கட்டமைப்பை, உள்ளடக்க வகையை அலல்து பாதுகாப்பு வியூகத்தை ஊகிக்கவில்லை. எனினும் பயனர்கள் பயன்படுத்த உதவியாக ஒரு எக்சு.எம்.எல் இசுகீமாவை பிறமிசு பணிக்குழு பராமிக்கின்றது.
பிறமிசு தரவு அகராதி நிர்வாக மீதரவு, எல்லா வகை உள்ளடக்கங்களுக்கும் பொதுவான நுட்ப மீதரவு, உரிமைகள்/தோற்றமுதல் மீதரவு ஆகியவற்றை விபரிக்கின்றது. குறிப்பான வகைக்கு உரிய நுட்ப மீதரவுகள் (எ.கா MIX, TextMD, MPEG-7) பிறமிசுக்கு உட்புத்த முடியும். பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு தேவையான கட்டமைப்பு உறவுகளையும் (structural relationships) ஐயும் விபரிக்க முடியும்.
தரவு மாதிரி
தொகுபிறமிசு தரவு மாதிரி பின்வரும் நான்கு முதன்மை உருபொருட்களைக் எண்ணிமப் பாதுகாப்பு முக்கியமானவையாக விபரிக்கிறது. தரவு அகராதியில் விபரிக்கப்படும் ஒவ்வொரு சொற்பொருள் அலகும் இந்த நான்கு உருப்பொருட்களில் ஒன்றின் பண்பு ஆகும்.
- பொருள்: மேலாண்மை மற்றும் விபரிப்புக் காரணங்களுக்காக ஒரு அறிவுசார் அலகாகக் கருதப்படும் தகவல் தொகுதி. இது நான்கு உள் வகையினங்களைக் கொண்டது: அறிவுசார் உருபொருள் (Intellectual Entity), சார்பீடு (Representation), கோப்பு (File), மற்றும் துணுக்கோடை (Bitstream). ஒரு எண்ணிமப் பொருளைப் பாதுகாக்கத் தேவையான சூழல் (Environment) அறிவுசார் உருபொருளாக விபரிக்கப்படலாம்.
- நிகழ்வு: பொருளை அல்லது முகவரை பாதிக்கும் ஒரு நிகழ்வு.
- முகவர்: ஒரு பொருளுக்கு நடக்கும் நிகழ்வுகளுடன் அல்லது ஒரு பொருளின் உரிமைகளோடு தொடர்புடைய ஒரு நபர், நிறுவனம் அல்லது மென்பொருள்.
- உரிமைகள் கூற்று: பொருளுக்குரிய அல்லது முகவரின் உரிமைகளை அல்லது அனுமதிகளை வலியுறுத்தும் துணிவுரை.
தரவு அகராதி
தொகுதரவு அகராதி ஒவ்வொரு உருபொருளுக்கும் பயன்படக்கூடிய சொற்பொருள் அலகுகளை பட்டியலிட்டு விபரிக்கின்றது. விபரிப்பில் பின்வரும் விடயங்கள் அடங்குகின்றன:[4]
- சொற்பொருள் அலகின் பெயர் - Name of the semantic unit
- சொற்பொருள் அலகின் கூறுகள் - Semantic components (A semantic unit that has semantic components does not have any value of its own)
- வரையறை - Definition
- காரண விளக்கம் - Rationale
- தரவுக் கட்டுப்பாடு - Data constraint
- பொருள் வகை - Object category
- பொருந்துந் தன்மை - Applicability
- எடுத்துக்காட்டுக்கள் - Examples
- திரும்பச்செய்தகுமை - Repeatability
- கடமை - Obligation
- உருவாக்கம்/பராமரிப்புக் குறிப்புகள் - Creation/Maintenance note
- பயன்பாட்டுக் குறிப்புகள் - Usage notes
எடுத்துக்காட்டாக பொருள் உருபொருளின் ஒரு சொற்பொருள் அலகு 1.1 objectIdentifier ஆகும். அது 1.1.1 objectIdentifierType, 1.1.2 objectIdentifierValue ஆகிய இரு கூறுகளைக் கொண்டது. இது ஒரு பொருளை தனித்துவமாக களஞ்சியத்தில் அடையாளப்படுத்த பயன்படுகிறது. இது ஒரு பொருளுக்குக் கட்டாயம இருக்கவேண்டிய ஒரு உருபொருள் ஆகும். இது பின்வருமாறு ஒரு METS விபரிப்பில் இடம்பெறலாம்:
<premis:objectIdentifier>
<premis:objectIdentifierType>UUID</premis:objectIdentifierType>
<premis:objectIdentifierValue>1625cb96-a220-4ac1-a008-8dde2b53b208</premis:objectIdentifierValue>
</premis:objectIdentifier>
இன்னுமொரு எடுத்துக்காட்டு உரிமைகள் தொடர்பான தகவல்களை METS பொதியின் ஒரு பகுதியாக பிறமிசு துணைகொண்டு விபரிக்கின்றது.
<?xml version='1.0' encoding='ASCII'?>
<mets:mets xmlns:mets="http://www.loc.gov/METS/" xmlns:xsi="http://www.w3.org/2001/XMLSchema-instance" xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" xsi:schemaLocation="http://www.loc.gov/METS/ http://www.loc.gov/standards/mets/version18/mets.xsd">
<mets:metsHdr CREATEDATE="2015-12-22T04:15:52"/>
.....
<mets:amdSec ID="amdSec_4">
.....
<mets:rightsMD ID="rightsMD_1">
<mets:mdWrap MDTYPE="PREMIS:RIGHTS">
<mets:xmlData>
<premis:rightsStatement xmlns:premis="info:lc/xmlns/premis-v2" xsi:schemaLocation="info:lc/xmlns/premis-v2 http://www.loc.gov/standards/premis/v2/premis-v2-2.xsd">
<premis:rightsStatementIdentifier>
<premis:rightsStatementIdentifierType>UUID</premis:rightsStatementIdentifierType>
<premis:rightsStatementIdentifierValue>a5ef0525-1dad-45b6-ab31-a08d1eed5399</premis:rightsStatementIdentifierValue>
</premis:rightsStatementIdentifier>
<premis:rightsBasis>Copyright</premis:rightsBasis>
<premis:copyrightInformation>
<premis:copyrightStatus>Public Domain</premis:copyrightStatus>
<premis:copyrightJurisdiction>Sri Lanka</premis:copyrightJurisdiction>
<premis:copyrightStatusDeterminationDate>1999-11-03</premis:copyrightStatusDeterminationDate>
<premis:copyrightApplicableDates/>
</premis:copyrightInformation>
<premis:linkingObjectIdentifier>
<premis:linkingObjectIdentifierType>UUID</premis:linkingObjectIdentifierType>
<premis:linkingObjectIdentifierValue>57b29cdc-9a0b-40ed-a3f3-98daffc94afc</premis:linkingObjectIdentifierValue>
</premis:linkingObjectIdentifier>
</premis:rightsStatement>
</mets:xmlData>
</mets:mdWrap>
</mets:rightsMD>
.....
</mets:amdSec>
.....
</mets:mets>
செயற்பரப்புக்கு அப்பால்பட்டவை
தொகு- ஒவ்வொரு உள்ளடக்க வகைக்கும் சிறப்பான மீதரவை பிறமிசு விபரிக்கவில்லை
- சேமிப்பு ஊடகத் தகவல்களைப் பற்றி முழுமையான விபரிப்பை தரவில்லை
- வணி விதிகள்(Business Rules) அல்லது செயலாக்கங்கள் தொடர்பான தகவல்களை விபரிக்க முடியாது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Conformant Implementation of the PREMIS Data Dictionary" (PDF). PREMIS Editorial Committee. 2015. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2016.
- ↑ Angela Dappert and Markus Enders (2010). "Digital Preservation: Metadata Standards". Information Standards Quarterly VOL 22 (2). https://www.loc.gov/standards/premis/FE_Dappert_Enders_MetadataStds_isqv22no2.pdf.
- ↑ "PREMIS Data Dictionary for Preservation Metadata version 3.0" (PDF). PREMIS. November 2015. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2016.
- ↑ "PREMIS Data Dictionary for Preservation Metadata - Version 3" (PDF). Library of Congress. June 2015. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2016.
வெளி இணைப்புகள்
தொகு- PREMIS - (ஆங்கில மொழியில்) - அதிகாரபூர்வ வலைத்தளம்
- Tools for preservation metadata implementation - (ஆங்கில மொழியில்)
- Rights in the PREMIS Data Model - (ஆங்கில மொழியில்)
- Rights Entity - (ஆங்கில மொழியில்)
- Current Status of PREMIS Implementation in American Archives and Historical Societies - (ஆங்கில மொழியில்)