பாத்திமா பூட்டோ

பாத்திமா பூட்டோ  ( Fatima Murtaza Bhutto 29 மே 1982) பாக்கிசுத்தான் பெண் எழுத்தாளர் ஆவார். இவர் பாக்கிசுத்தான் மேனாள் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோவின் பெயர்த்தி ஆவார். மேலும் பெனசீர் பூட்டோவின் அக்காள் மகள் ஆவார்.[1][2] சிரியா மற்றும் கராச்சியில்  வளர்ந்த பாத்திமா புட்டோ பர்னார்ட் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். சில நூல்களும் நியூயார்க்கு டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஆசாத் காசுமீரத்தில் நிகழ்ந்த நில அதிர்வினால் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் அவலங்களைப் பற்றி ஒரு நூலில் எழுதினார். சாங்ஸ் ஆப் பிலட் அண்ட் சுவோட் என்ற நூலும் எழுதியுள்ளார்.

பாத்திமா பூட்டோ

மேற்கோள்

தொகு
  1. "Fatima's Book on Quake Victims Launched". The Nation (Pakistan). 14 September 2006. http://moreresults.factiva.com/results/index/index.aspx?ref=AIWNAT0020060918e29e0000e. பார்த்த நாள்: 13 October 2010. 
  2. Walsh, Declan (11 January 2008). "The Broken Bloodline". The Guardian. https://www.theguardian.com/politics/2008/jan/11/women.pakistan. பார்த்த நாள்: 13 October 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_பூட்டோ&oldid=2714266" இலிருந்து மீள்விக்கப்பட்டது