பாந்து தோத்ரே

இந்திய வனவிலங்கு செயற்பாட்டாளர்

பாந்து தோத்ரே (Bandu Dhotre) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வனவிலங்கு ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஆவார்.[1][2] வனவிலங்குகளை மீட்பதில் இவர் ஆற்றிய பணிக்காக, இந்தியா டுடே பத்திரிக்கை தோத்ரேவை உள்ளூர் கதாநாயகன் என்று அடையாளம் காட்டியது.[3] வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சமூக சேவை துறையில் தோத்ரேயின் மகத்தான பங்களிப்புகளுக்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2013-14 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் விருதையும் வழங்கி சிறப்பித்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்து_தோத்ரே&oldid=3920493" இலிருந்து மீள்விக்கப்பட்டது